காவிரி விவகாரம்: கர்நாடகம் மீது பன்னீர் பாய்ச்சல்
சென்னை:
காவிரியில் 187.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருப்பதாக கர்நாடக அரசு பொய் சொல்கிறது என்று தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் கூறினார்.
நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்று சமீபத்தில் தமிழக சட்டசபையில்பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இதற்கு நேற்று பதிலளித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல், காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படிதான்கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது என்றும் ஏப்ரல் 28ம் தேதி நிலவரப்படி 187.5 டி.எம்.சி.தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதை இன்று தமிழக சட்டசபையில் பன்னீர்செல்வம் வன்மையாக மறுத்தார். 187.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக பாட்டீல் பொய் கூறுவதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.
இதுவரை 160.67 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதாகக் கூறியபன்னீர்செல்வம், மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்துள்ள தண்ணீரின் அளவை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்னும் 45 டி.எம்.சி. தண்ணீர் வர வேண்டியுள்ளதாகவும் பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார்.
காவிரிப் பிரச்சனை தொடர்பாக தனி ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழகஅரசு வலியுறுத்தப் போவதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications