"நக்கீரன்" நிருபரை போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிருபர்சிவசுப்ரமணியத்தைப் போலீஸ் காவலில் ஒப்படைக்க சத்தியமங்கலம் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிவசுப்ரமணியம் வியாழக்கிழமைசத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சிவசுப்ரமணியத்தை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருமாறு போலீஸ் தரப்பில்கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது சிவசுப்ரமணியம் கூறுகையில்,
ஏற்கனவே வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக இரண்டு முறை போலீஸ் காவலில்என்னை எடுத்தார்கள். அப்போதே எல்லா விவரங்களையும் தெரிவித்து விட்டேன்.
இந்நிலையில் மீண்டும் என்னை போலீஸ் காவலில் அனுப்பினால், ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கில் போட்டுவிடுவார்கள். எனவே போலீஸ் காவலில் என்னை ஒப்படைக்கக் கூடாது என்று கோரினார்.
இதையடுத்து சிவசுப்ரமணியத்தை மீண்டும் போலீஸ் காவலில் அனுப்ப நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து சிவசுப்ரமணியம் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் கோயம்புத்தூர் மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications