மீண்டும் உ.பி. முதல்வரானார் மாயாவதி
லக்னோ:
3வது முறையாக இன்று மாயாவதி உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.
தனது வாழ்க்கையை பள்ளி ஆசிரியையாக தொடங்கிய மாயாவதி, அரசியலில் நுழைந்து கடந்த 7 வருடங்களில் 3வது முறையாகஉத்திரபிரதேசத்தின் முதல்வர் பதவியை பிடித்துள்ளார். தலித் இன மக்களின் தலைவியாக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்இவர்.
47 வயது நிரம்பிய மாயாவதி இதற்கு முன் 6 மாத காலம் கூட முதல்வர் பதவியில் நீடித்ததில்லை.
1985 மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் பிஜ்னோர் மற்றும் ஹரித்வாரில் இரண்டு முறை இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். பிறகு,1989ஆம் ஆண்டு பிஜ்னோரில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய மாயாவதி, 1995 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பா.ஜ.க. ஆதரவுடன் முதல்முதலாக முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஆனால், சில மாதங்களிலேயே இவரது ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது.
மீண்டும் பா.ஜ.க. ஆதரவுடன் பதவிக்கு வந்தார். மீண்டும் கவிழ்ந்தார்.
இப்போது மூன்றாவது முறையாக அவர் மீண்டும் உத்திரபிரதேசத்தின் முதல்வராகி உள்ளார். இப்போதும் அதே பா.ஜ.கவுடன் தான்.முலாயம் சிங் முதல்வராகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவும இவரிடம் உள்ள 10 எம்.பிக்களைக் கணக்கில் கொண்டும் தான்பா.ஜ.க. இவரை முதல்வராக்கியுள்ளது.
இந்த சோதனை முயற்சி எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications