பஸ்ஸை நிறுத்திவிட்டு ஸ்டாலினுக்கு ஆதரவாக வசனம்: கண்டக்டர் சஸ்பெண்ட்
சென்னை:
சென்னையில் உண்ணாவிரதம் இருந்த மேயர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை சரியானதுதான் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நியாயப்படுத்தினார்.
சட்டசபையில் போக்குவரத்துக் கழக மானியக் கோக்கையை போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் தாக்கல் செய்தார்.
இதன் மீதான விவாதததில் திமுக உறுப்பினர் வேலு பேசுகையில்,
சமீபத்தில் மேயர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அந்தப் பகுதிவழியாக சென்ற பஸ்களில் இருந்த பயணிகள், மேயரை வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதே போல அந்த வழியாகச் சென்ற ஒரு பஸ்சின் பயணிகள் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்று மேயரை கைகுலுக்கிவாழ்த்தினர். இதையடுத்து பஸ்ஸை கிளப்புவதற்காக இறங்கிச் சென்ற பயணிகளை அழைத்து வர பஸ்சின் கண்டக்டர் இறங்கிச்சென்றுள்ளார்.
ஆனால் இதை மாற்றி, மேயருக்கு அவர் வாழ்த்துக் கூறியதாகக் கூறி அந்த கண்டக்டரை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுநியாயமா? என்று கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் வேலு, தெரிந்தே பொய்யான தகவலை அவையில் கூறிக்கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட கண்டக்டர், அந்தப் பகுதியில் டிராபிக் காரணமாக பஸ் நின்றபோது, டிரைவருக்கும்தெரியாமல் இறங்கிச் சென்றுள்ளார்.
பின்னர் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினுக்கு கைகுலுக்கி வாழ்த்துத் தெவித்துள்ளார். பின்னர் மைக்கில், நான் இப்போதுடூட்டியில் இருக்கிறேன். எனவே டூட்டி முடிந்த பின் மாலையில் வந்து பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.
கண்டக்டரின் இந்தச் செயல் காரணமாக பஸ்சை எடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டு பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், டியூட்டியில் இருக்கும்போது அரசியல் சார்பான ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மைக்கில் வசனம் பேசியதாலும், பணி நேரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டகாரணத்தாலும்தான் அந்த கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது சட்டப்படி சரியான நடவடிக்கைதான் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications