ரவுடிகளை ஓடி ஓடி விரட்டிப் பிடித்த டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்
சென்னை:
மதுரையில் பிரபல ரவுடி ஆப்பிள் பாண்டி என்பவன் சில தினங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றபோட்டி ரவுடிக் கும்பலை போலீஸார் சேஸ் செய்து பிடித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை, மதுரை ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தனது ஜீப்பில் ரிங் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது செல்போன் கிணுகிணுக்கிறது. செல்போனில் பேச வசதியாக ஜீப் டிரைவைர் வண்டியை ஓரம்கட்டுகிறார்.
அப்போது அருகே உள்ள புதர் அசைகிறது. தொடர்ந்து, சிலர் புதருக்குள்ளிருந்து வெளியே வருகிறார்கள். மீண்டும் திரும்பிமறைய முயல்கின்றனர்.
அவர்களைப் பார்த்த இன்ஸ்பெக்டர், செல்போனை ஆப் செய்து விட்டு அவர்களை கூப்பிடுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டரைப்பார்த்து பயந்து போன அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். ஏதோ தவறான ஆட்கள் என்று முடிவு செய்த இன்ஸ்பெக்டர்தனது ஜீப்பில் அவர்களைத் துரத்திச் செல்கிறார்.
போகும் வழியிலேயே டி.எஸ்.பி. பெருமாளுக்கும் தகவல் சொல்கிறார். அவரும் ஜீப்பில் அந்தப் பகுதிக்கு விரைந்து வருகிறார்.தப்பியோடிய கும்பல் திருச்சி சாலையில் ஓடத் தொடங்கியது.
சாலையில் ஓடிக் கொண்டிருந்த அக்கும்பல், திடீரென சாலையை விட்டு இறங்கி புதர்களுக்குள் மறைந்து மின் நகர் பகுதிக்குள்ஓடியது. இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், டிரைவர் மணி, டி.எஸ்.பி. பெருமாள் ஆகியோரும் விடாமல் ஜீப்பை நறுத்தி விட்டு மின்நகருக்குள் ஓடினர்.
அப்போது ஜப்பான் முருகன் என்பவன் இவர்களிடம் சிக்கினான் மற்ற நான்கு பேரில் காளி என்பவன் தப்பி விட்டான். மற்ற 2பேரும் ஒரு வீட்டுக்குள் போய் பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் துப்பாக்கியுடன் வீட்டுக்குள்புகுந்தார்.
அவரை உள்ளே மறைந்திருந்த 2 பேரும் தாக்க முயன்றனர். இதையடுத்து தற்காப்புக்காக விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டார்.இதில் பி.பி.ராஜா என்பவனின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
அதன் பின்னர் 2 பேரும் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சமீபத்தில் மதுரையில் நடுரோட்டில்வைத்துக் கொல்லப்பட்ட ரவுடி ஆப்பிள் பாண்டியை கொன்ற கும்பலில் தாங்களும் இடம் பெற்றிருந்ததாக இவர்கள் கூறியதாகதெரிகிறது.
குண்டுக் காயம் பட்ட ராஜா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ரவுடிகளுடன் மோதியதில்காயமடைந்த இன்ஸ்பெக்டர் விஜயக்குமாரும் முதலுதவி சிகிச்சை பெற்றார். சுமார் 90 நிமிடங்களுக்கு இந்தத் துரத்தல் நடந்தது.டி.எஸ்.பியும் சேர்ந்து ஓடி ரவுடிகளைப் பிடித்தது போலீசார் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications