சென்னையில் வீடு, ஸ்டூடியோ, ஜெராக்ஸ் கடைகளில் தொடர் கொள்ளை
சென்னை:
சென்னையில் நேற்றைய கோட்டாவையும் கொள்ளையர்கள் பூர்த்தி செய்தனர்.
சென்னையில் வீடுகளை ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டு கொள்ளையர்கள் தினந்தோறும் கொள்ளையடித்துவருகின்றனர்.
நேற்றிரவு வீட்டின் உரிமையாளர்கள் சிறிது நேரம் பக்கத்துத் தெருவுக்குச் சென்று விட்டுத் திரும்புவதற்குள் அந்தவீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து சாவகாசமாய் தங்கியிருந்து 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ளநகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
எப்போதும் ஜன நடமாட்டம் நிறைந்த ஹார்ட்-ஆப்-த-டவுன் பகுதியான வேப்பேரியில் இச் சம்பவம் நடந்துள்ளது.இங்குள்ள சந்தன்பாலா என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் வசித்து வருபவர் வினோத் ஜெயின்.
இவர் தனது மனைவியுடன் நேற்றிரவு அடுத்த தெருவில் உள்ள மாமியாரின் வீட்டுக்குச் சென்றார். ஒரு மணிநேரத்தில் அவரது மனைவி மட்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
அப்போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பெட் ரூமில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டில்யாருமே இல்லையே, எப்படி உள்ளே தாழ்பாள் போட்டிருக்கும் என்று வியந்த அந்த பெண் பெட்ரூம் ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தார்.
உள்ளே கொள்ளையன் ஒருவன் பெட்டின் மீது உட்கார்ந்து இருந்தான். பீரோவை உடைத்து அதிலிருந்த நகைப்பெட்டியை எடுத்து நகைளை பிரித்துக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அந்தப் பெண் உடனே காவலாளியை துணைக்கு அழைத்தார். அவர் 3வது மாடிக்கு ஓடிவருவதற்குள் திருடன் பின் பக்க ஜன்னல் வழியாக தப்பிவிட்டான். ஜன்னலில் இருந்து கீழ் வீட்டு வராண்டாவுக்குக்குதித்து அங்கிருந்து படிகள் வழியாக இறங்கி தப்பிவிட்டான்.
இதற்கு வசதியாக ஜன்னலை முதலிலேயே திருடன் உடைத்து வைத்துக் கொண்டு இருந்திருக்கிறான். மிகசாவகாசமாய் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான்.
வீடு உள் பக்கமாக பூட்டியிருந்தததால் கதவைத் திறக்க முடியாமல் அந்தப் பெண்ணும் காவலாளியும திணறிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திருடன் தப்பினான்.
பின்னர் தான் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே போய் பார்த்தபோது பீரோவில் இருந்த 1.5 லட்சம் மதிப்புள்ளதங்க நகைகள, பணம் கொள்ளை போயிருந்தது. அவன் வெள்ளி நகைகளைத் தொடவேயில்லை. பீரோவைஉடைத்தது தவிர வேறு பொருள்களைத் தொடவும் இல்லை.
கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ 17,000 ஆகும்.
ராஜா அண்ணாமலைபுரத்தில்...
இதே போல ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையிலும் கொள்ளையர்கள் கை வரிசையைக்காட்டியுள்ளனர். இங்கிருந்த மெஷினும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் மதிப்பு தெரியவில்லை.
ஸ்டூடியோவில்...
இதே பகுதியில் ஒரு ஸ்டூடியோவையும் உடைத்து அங்கிருந்த கேமராக்கள், கம்ப்யூட்டர்கள் உள்பட 70,000 ரூபாய்மதிப்புள்ள பொருள்களை கொள்ளையடித்தனர்.
நேற்றிரவு இச் சம்பவங்கள் நடந்துள்ளன.












Click it and Unblock the Notifications