சிறுமிகளிடம் செக்ஸ்: நெதர்லாந்து நாட்டவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மகாபலிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு லிட்டில் ஹோம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இந்தஇல்லத்தை நிெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹியூம் என்பவர் நடத்தி வருகிறார். மகாபலிபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர்தொலைவில் இந்த இல்லம் அமைந்துள்ளது.

இந்த லிட்டில் ஹோம் இல்லத்தில் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட 19 சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 42 பேர் உள்ளனர்.அனைவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த இல்லத்திற்கு சமீபத்தில் கிருஷ்ணன் என்ற சிறுவன் வந்து சேர்ந்தான். இல்லத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்குசிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்படுவதை உணர்ந்தான். இதையடுத்து இல்லத்திலிருந்து தப்பி வந்துமகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்.

அவனது புகாரை ஏற்ற போலீஸார் விரைந்து சென்று இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதியானது.

இதையடுத்து ஹியூம், இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த இல்லத்தில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் ஆகியோரும் வசித்துவருகிறார்கள்.

இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+