கனடா தமிழ் பெண்-பீகார் வாலிபரை சேர்த்த இன்டெர்நெட் காதல்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

கனடாவில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணும், பீகாரில் வசிக்கும் பையனும் இன்டெர்நெட் சாட்டிங் முலம் காதலை வளர்த்துதிருநீர்மலையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் மணமகன் ஆனந்த் கபூர்(24). இவர் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்துவிட்டு, ஐதராபாத்தில் உள்ள டாப்டர் சிஸ்டம் என்னும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மணமகள் எஸ்.ஜானகி(22) கனடாவில் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.சி பயோஸைன்ஸ் படித்தவர். இவரது தந்தை சக்திவேல்,கனடாவில் குரூப்போர் கம்பெனியில் செக்யூரிட்டி ஆபீஸராக பணிபுரிந்து வருகிறார். தாயார் சரஸ்வதி. சகோதரர் சத்யேந்திரன்மருத்துவக் கல்வி படித்து வருகிறார்.

இவர்களது பூர்வீகம் இலங்கையில் உள்ள தேவிவேலா வந்தர்வார்ட் ஆகும். கடந்த 1983ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர்பிளாட்டினம் அபார்ட்மெண்ட்டிற்கு குடிவந்தனர். பிறகு கனடாவில் வேலை கிடைத்து கனடாவுக்கு குடிபெயர்ந்தனர்.

சாட்டிங்கில் ஈடுபாடு உள்ள இருவரும் ஒரு நாள் நெட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நட்பானது. அது வளர்ந்தது. இருவருக்கும்ஒருவரை ஒருவர் பிடித்துப் போய் விட, அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து சென்னையில் சந்திக்கலாம் என்று தீர்மானித்து, இருவரின் குடும்பமும் சென்னை வந்து தி.நகரில் ஒரு ஹோட்டலில்தங்கியிருந்தனர். இரு தரப்பினருக்கும் பிடித்துப் போய்விட, சென்னையில் உள்ள உறவினர்களை வைத்து பேசி திருநீர்மலைகோவிலில் திருமணம் செய்வது என்று தீர்மானித்தனர்.

அதன்படி நேற்று காலை 8.30 மணிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருநீர்மலை ரங்கநாதர் கோவிலில் அவர்களின்திருமணம் நடந்தது. பிறகு சப்ரிஜிஸ்ட்ரார் ஆபிசில் பதிவு திருமணமும் நடைபெற்றது.

ஆனந்த் கபூரும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு செல்ல இருப்பதாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+