வாணியம்பாடி ஸ்பெஷல்: முஸ்லீம் இளைஞர்கள் மீது திடீர் பாசமழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலைவாய்ப்பில்லாமல் இருந்து வரும் முஸ்லீம் இளைஞர்களுக்கு உதவும் வகையில் சிறுதொழில் வாய்ப்புத் திட்டம் ஒன்றைதமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

சட்டசபையில் பிற்பட்டோர் நலத்துறை மானியக் கோக்கையை அமைச்சர் சுதர்சனம் தாக்கல் செய்து பேசுகையில்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 1000 முஸ்லீம் இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவர்.அவர்களுக்கு சிறுதொழிலில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்குப் பின் இந்த இளைஞர்களுக்கு தேசிய சிறுபான்மை வளர்ச்சி மற்றும் நிதி கழகத்திடமிருந்து ரூ. 25,000 வரை கடனாகபெற்றுத் தரப்படும். அதை வைத்துக் கொண்டு தாங்கள் கற்றுக் கொண்ட சிறுதொழிலை அவர்கள் மேற்கொள்ளலாம்.

முதல்கட்டமாக வேலூர், கோயம்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 470 ஸ்லீம் இளைஞர்கள் இந்தப் பயிற்சித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி முடிந்தவுடன் கடனுதவி அளிக்கப்படும்.

இவர்கள் தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்களை ஆரம்பித்து செயல்படுத்துவர் என்றார் அவர்.

இந்த சிறுதொழில் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று வாணியம்பாடியாகும்.

முஸ்லீம்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் வரும் இங்கு வருகிற 31ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+