அமைச்சராக இருந்தபோது லாரியில் மணல் கடத்தினேன்: பொன்முடி
சென்னை:
நான் அமைச்சராக இருந்த போது லாரியில் மணல் கடத்தியது உண்மை தான்; ஆனால் அதற்கான அபராதத்தை கட்டிவிட்டேன்என்று பொன்முடி சட்ட சபையில் கூறினார்.
இதனால் திமுக தவிர அதிமுக எம்.எல்.ஏக்களும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தமிழக சட்ட சபை நேற்று போக்குவரத்து மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தியது. விவாதம் பின்வருமாறு :-
வேலு (திமுக): தமிழகத்தில் போக்குவரத்துத்துறையில் மட்டும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.போக்குவரத்தை தனியார்மயமாக்கினால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
அமைச்சர் விஸ்வநாதன்: மினி பஸ் திட்டத்தின் மூலம் போக்குவரத்தில் தனியாரை அனுமதித்ததே நீங்கள் தானே? அதனால்தான் போக்குவரத்து துறையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதே. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்களே.
பொன்முடி (திமுக): மினிபஸ் திட்டத்தின் மூலம் ஓரளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதனால் தான் முழு நஷ்டம்ஏற்பட்டது என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலூர்சாமி (அதிமுக): கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி கடலூர் மாவட்ட அதிகாரி சோதனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது டி.என்.32 ஏ 3789 என்ற லாரி மணல் திருடிச் சென்றது. அந்த லாரி யாருடையது என்றுவிசாரித்தபோது, அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த பொன்முடியின் மனைவியின் பெயரில் உள்ள லாரி என்பதுதெரிய வந்தது. அந்த லாரிக்கு மணல் கடத்திய குற்றத்திற்காக 25,480 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சபாநாயகர் காளிமுத்து: உறுப்பினர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் அதை என்னிடம் தரலாம். அதுபரிசீலிக்கப்பட்டு அவை குறிப்பில் ஏற்றப்படும்.
அமைச்சர் விஸ்வநாதன்: இது பற்றி ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. குற்றச்சாட்டை பொன்முடி ஏற்றுக் கொண்டுள்ளார்.
சபாநாயகர்: பொன்முடி பொறுப்பேற்றதால் இது அவை குறிப்பில் இடம் பெறுகிறது.
பொன்முடி: மணல் கடத்தல் தொடர்பாக என் மீது உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டு உண்மை தான், செய்த தவறை ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை எங்களுக்கு உண்டு.
அமைச்சர் விஸ்வநாதன்: பொன்முடி தன் தவறை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ஆனல், உங்கள் லாரியை பிடித்த காரணத்திற்காகஅந்த அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்தீர்களே? இது தான் உங்கள் பெருந்தன்மையா?
அதிமுகவினரால் மடக்கப்பட்ட பொன்முடி, அந்த கேள்விக்கு பதிலளிக்காமல், போளூரைச் சேர்ந்த லாரி கூட சமீபமாக மணல்கடத்தியது... என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தார். ஆனால், சபாநாயகர் இடைமறித்தார்.
சபாநாயகர்: பொன்முடி, உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதோடு விடுங்கள். மற்றொரு குற்றச்சாட்டைகூறினால் ஆதாரத்தை என்னிடம் தந்துவிட்டு கூறுங்கள்.
பொனமுடி: நான் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்ட பின்னரும் திருடன் திருடன் என்று கூறினால் எப்படி?
மேலூர்சாமி: திருடனை திருடன் என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது? கடந்த ஆட்சியில் வயது முதிர்ந்த அமைச்சர்கள்முதல்வர் பின்னாலும், வயது குறைந்தவர்கள் மேயர் பின்னாலும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். மக்கள் பணி செய்ய அவர்ளுக்குஎங்கே நேரம் இருந்தது?
திமுக உறுப்பினர் துரைமுருகன் (உணர்ச்சிவசப்பட்டவராய்): நாங்கள் எப்படி வேண்டுமானாலும் சுற்றுவோம்,அதைப் பற்றிஉங்களுக்கென்ன.
மேலூர்சாமி: மக்கள் பிரச்சினையை கவனிக்காமல் சுற்றியதால் தான் கூறினேன். எங்கள் புரட்சித்தலைவி எங்களுக்கு மக்கள்பிரச்சினையை கவனிக்க வேண்டும்; சும்மா ஊர் சுற்றக்கூடாது என்று கூறியிருக்கிறார் என்றார்.
மணல் கடத்தியதை இப்போது ஒப்புக் கொண்ட பொன்முடியைப் பாராட்டுவதா? இல்லை அவரது லாரியைப் பிடித்தநேர்மையான அதிகாரியை அதிகாரத்தில் இருந்தபோது இடமாற்றம் செய்தற்காக அவரை வசைபாடுவதா என்று தெரியவில்லை.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications