காவிரி பெயரில் வெட்டிச் சண்டை: ராமதாஸ் ஆவேசம்
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் யார் தமிழக மக்களுக்கு அதிக துரோகம் செய்தது என்பது குறித்து இரு திராவிடக்கட்சிகளும் வெட்டிச் சண்டை போட்டுக் கொண்டிருக்காமல் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகத்திடம்இருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிர் விஷயத்தில் மக்களுக்கு யார் துரோகம் செய்தது என்று அதிமுகவும் திமுகவும் வாய்ச் சண்டை போட்டுவருகின்றன. இவர்களுக்கு மேட்டூர் அணை வறண்டு போய் வெறும் குட்டை மாதிரி காட்சியளிப்பது குறித்துகவலையில்லை.
இந்த மோதலை விட்டுவிட்டு கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரை உரிமையுடன் பெறவேண்டும். இதற்காக தமிழக முதல்வர் கர்நாடகத்துக்குச் சென்று அம் மாநில அரசுடன் பேச வேண்டும்.
தேவைப்பட்டால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள், தமிழகஎம்.பிக்களை அழைத்துக் கொண்டு பிரதமரைக் கூட சந்திக்க முதல்வர் ஜெயலலலிதா முயல வேண்டும்.
இல்லாவிட்டால் மேட்டூர் அணை காய்ந்துபோய் விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள்.
இதனால் காவிரி விவகாரத்தில் வெட்டிச் சண்டையை முதலில் அனைத்துத் தரப்பினரும் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications