சோபாவுக்குள் பணத்தை மறைத்த கடைக்காரர்: திருட வந்து பிடிபட்டார் முன்னாள் ஊழியர்
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சோபா கடைக்குள் புகுந்து பணம் திருட முயன்ற 2 பேரை போலீஸார் கையும் களவுமாகபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் பிரபலமான சோபா கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல்2 பேர் வந்தனர். கடையின் பின் பகுதி வழியாக பூட்டை உடைத்துக் கொண்டு ஒருவர் உள்ளே நுழைந்தார். மற்றொருவர்கடைக்குக் கீழேயே நின்று கொண்டார்.
திருடர்கள் கடைக்குள் நுழைவதை, பக்கத்து வீட்டில் மாடி மீது இருந்த ஒருவர் பார்த்து விட்டார். இதையடுத்து உடனடியாகபோலீஸுக்குத் தகவல் கொடுத்தார். தொடர் கொள்ளை சம்பவங்களால் நொந்து போயுள்ள போலீஸார் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
கடையின் கீழே நின்றிருந்தவர் மற்றும் கடைக்குள் திருடப் போனவர் என இரண்டு பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
திருட வந்தவர்களின் பெயர்கள் தணிகைவேலு மற்றும் ரவி. இவர்களில் தணிகைவேலு இந்தக் கடையில்தான் வேலை பார்த்துவந்துள்ளார். சமீபத்தில் கடையில் இருந்து விலகியுள்ளார்.
இவர் இங்கு வேலை பார்த்து வந்தபோது, சோபா கடையில் வருமான வரி அதிகாரிகளின் திடீர் சோதனை நடந்தது. அப்போதுகையில் இருந்த பணத்தை வருமான வரி அதிகாரிகளிடமிருந்து மறைப்பதற்காக கடை உமையாளர், சோபா செட்டுகளில்சிலவற்றில் உள்ளே வைத்து தைத்து விட்டார்.
இது தணிகைவேலுவுக்குத் தெரிந்திருந்தது. இந் நிலையில் தான் அவர் வேலையை விட்டு நின்றுள்ளார்.
தணிகைவேலுவின் அண்ணனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதற்குப் பணம் தேவைப்பட்டது. இதையடுத்துசோபா கடையில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தணிகைவேலுவின் நினைவுக்கு வந்தது.
இதையடுத்து தனது நண்பர் ரவியிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பணத்தைத் திருட முடிவு செய்துஇருவரும் வந்துள்ளனர். அப்போதுதான் மாட்டிக் கொண்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் இந்தத் தகவலை வருமான வரித்துறையினருக்கும் தெரிவித்துவிட்டனர். இதனால், அவரும் மாட்டவுள்ளார்.












Click it and Unblock the Notifications