லோக்சபா சபாநாயகர் பதவி: தெலுங்கு தேசம் ஏற்குமா?
ஹைதராபாத்:
லோக்சபா சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் ஏற்காத பட்சத்தில் அந்தப் பதவியை தானே வைத்துக் கொள்ளபா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து வரும் தெலுங்கு தேசம்சபாநாயகர் பதவியை மட்டும் கேட்டுப் பெற்றது. தனகு கட்சியைச் சேர்ந்த பாலயோகியை சபாநாயகராக்கியது.ஆனால், சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாலயோகி மரணமடைந்தார்.
இதையடுத்து அக் கட்சியைச் சேர்ந்த இன்னொருவரையே சபாநாயகராக்க பா.ஜ.க. ஒப்புக் கொண்டது. ஆனால்,இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதில் சொல்லாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் குஜராத் கலவர புகழ் நரேந்திர மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாயுடுபோர்க் கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக பா.ஜ.கவினருடன் அவர் மோதி வருகிறார்.
இதனால் சபாநாயகர் பதவியை அவரது கட்சி ஏற்குமா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இந்தியநாடாளுமன்றத்தின் 50வது ஆண்டு தினம் வரும் 13ம் தேதி நடக்கிறது. அப்போது சபாநாயகர் பதவி காலியாகஇருப்பது நன்றாக இருக்காது என்பதால் 10ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடத்துவது என மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இந்தப் பதவியை தெலுங்கு தேசத்துக்குத் தரவும் பா.ஜ.க. விரும்பவில்லை. தனது கட்சியைச் சேர்ந்த ஜக்மோகன்,வி.கே. மல்ஹோத்ரா, மத்திய அமைச்சர் ராம்நாயக் இவர்களில் ஒருவரை சபாநாயகராக்க அக் கட்சி விரும்புகிறது.
ஆனால், தெலுங்கு தேசம் வேண்டாம் என்று சொன்னால் தான் பா.ஜ.க. தனது வேட்பாளரை நிறுத்த வேண்டும்என்று கூட்டணிக் கட்சிகள் தெளிவாகக் கூறிவிட்டன.
இதையடுத்து தெலுங்கு தேசத்தின் முடிவை பா.ஜ.க. கோரியுள்ளது.
இது குறித்து தனது கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தை இன்று மாலை அவசரமாகக் கூட்டியுள்ளார் நாயுடு. தனதுமுடிவை அவர் இன்று இரவில் தெரிவிப்பார்.
வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு:
இதற்கிடையே சபாநாயகர் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர்வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.












Click it and Unblock the Notifications