ஓடும் ரயிலில் கொள்ளை: 2 பேருக்கு கத்திக்குத்து
சென்னை:
சென்னையிலிருந்து மங்களூர் சென்ற ரயிலில் வழிப்பறிக் கொள்ளை நடந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு ரயில்நிறுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து நேற்றிரவு மங்களூருக்கு மெயில் ரயில் கிளம்பிச் சென்றது. ரயில், திருவள்ளூர்-கடம்பத்தூர் ரயில்நிலையங்களுக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கும்போது முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் இருந்த பெட்டிகளுக்குள் 8 பேர்கொண்ட கும்பல் திடீரென்று புகுந்தது.
பயணிகளை கத்தியைக் காட்டி மிரட்டிய அக்கும்பல், அவர்களிடமிருந்த நகை மற்றும் பணத்தை பறித்தனர். சென்னைவேளச்சேரியைச் சேர்ந்த பாலு மற்றும் மணிகண்டன் ஆகியோர் தங்களிடமிருந்த பணத்தைத் தர மறுத்துள்ளனர்.
அப்போது கும்பலைச் சேர்ந்த சிலர் இருவரையும் கத்தியால் குத்தி பணத்தைப் பறித்துள்ளனர். இதில் பாலுவுக்கும்,மணிகண்டனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
சில பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள்ரயிலிலிருந்து இறங்கித் தப்பி விட்டனர்.
காயமடைந்த இரு பயணிகளுக்கும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரம்தாமதத்திற்குப் பிறகு ரயில் கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications