பாஜகவுக்கே போகிறது மக்களவை சபாநாயகர் பதவி
டெல்லி:
மக்களவை சபாநாயகர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி கூறிவிட்டதையடுத்து,அப்பதவி பாஜகவுக்கே கிடைக்கவுள்ளது.
கடந்த மார்ச் 2ம் தேதி ஆந்திராவில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சபாநாயகராக இருந்த பாலயோகிமரணமடைந்ததையடுத்து, தற்போது அப்பதவி காலியாகவே உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகி இறந்ததால், மீண்டும் சபாநாயகர் பதவியை அக்கட்சிக்கேஒதுக்கியிருந்தது பாஜக.
ஆனால் குஜராத் பிரச்சனை குறித்து பாஜகவைக் கடுமையாக எதிர்த்ததோடு, அம்மாநில முதல்வர் மோடியைநீக்கியே தீர வேண்டும் என்றும் தெலுங்கு தேசம் கட்சி பிடிவாதம் பிடித்து வந்தது.
இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் மக்களவையில் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்துஓட்டளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, யாருமே எதிர்பார்க்காத வகையில் கடைசிநேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
தற்போது ராஜ்யசபாவில் குஜராத் விவகாரம் தொடர்பாக நடக்கும் விவாதத்திலும் பாஜகவை தீவிரமாக எதிர்த்துவருகிறது தெலுங்கு தேசம் கட்சி. தங்களுடைய நிலையிலிருந்து சிறிதும் பின் வாங்கப் போவதில்லை என்றுஅக்கட்சி தெளிவாக அறிவித்து விட்டது.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்கு அளிக்கக் கூடாது என்று பாஜகவில்கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில்,மக்களவை சபாநாயகர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர்சந்திரபாபு நாயுடுவும் இதை நிருபர்களிடம் அறிவித்து விட்டார்.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் பதவியை தானே எடுத்துக்கொள்ள பாஜக தற்போது முடிவு செய்துள்ளது.இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளுடன் பிரதமர் வாஜ்பாய் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.
தற்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ள ராம்நாயக், ஜக்மோகன் மற்றும் சாந்தகுமார் ஆகியவர்களின் பெயர்கள்இப்பதவிக்கு அடிபட்டாலும், பெட்ரோலியத்துறை அமைச்சரான ராம்நாயகே சபாநாயகராவார் என்று தெரிகிறது.
வரும் 10ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும்நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications