இடைத் தேர்தல்: புதிய நீதிக் கட்சி தனித்துப் போட்டி
வேலூர்:
வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தங்கள் கட்சி தனித்துப்போட்டியிடும் என்று புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி. சண்முகம் கூறினார்.
இதுகுறித்து அவர் வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
வாணியம்பாடியிலும் சைதாப்பேட்டையிலும் எங்கள் கட்சி தனியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
புதிய நீதிக் கட்சியின் பலத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்தத் தொகுதிகளில் முதல் முறையாகத் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
ஆனால் அச்சிறுப்பாக்கம் தொகுதியில நடுநிலை வகிப்போம். அங்கு நல்ல வேட்பாளராகப் பார்த்துவாக்களிக்கும்படி எங்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கும்.
அனைத்து முதலியார் மற்றும் வேளாளர்களுக்குப் பாதுகாப்பு கருதியே அனைத்து முதலியார் பேரவையும் புதியநீதிக் கட்சியும் தொடங்கப்பட்டன.
எங்கள் இனத்தவரை மிகப் பிற்படுத்தப் பட்டோராக ஆக்குவதே என் லட்சியமாகும். இது தொடர்பாக தமிழக அரசுஉயர்மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்தால், இனி வரும் தேர்தல்களில் நாங்கள் போட்டியிடாமலேயேஆதரவு தரத் தயாராக உள்ளோம்.
நான் இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்றார் சண்முகம்.
வாணியம்பாடி வேட்பாளர் ஷகிலா:
இதற்கிடையே புதிய நீதிக் கட்சியின் சார்பில் வாணியம்பாடியில் ஷகிலா தீர்த்தகிரி போட்டியிடுவார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வாணியம்பாடியில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர், வழக்கறிஞரான ஷகிலாஇத்தொகுதியில் போட்டியிடுவார் என்று சண்முகம் அறிவித்தார்.
சைதாப்பேட்டை வேட்பாளர் 10ம் தேதி அறிவிக்கப்படுவார் என்றும் சண்முகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications