பிரபாகரனைக் கைது செய்வதா? - போராட்டத்திற்கு அழைத்த நெடுமாறன் கைது
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்என்ற தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்துப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவரான பழ. நெடுமாறனை இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்னை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவுக்குப்பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 16ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தேவைப்பட்டால் இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்றும் பிரதமர்வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இதற்கிடையே பிரபாகரனைக் கைது செய்யும் தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறுபோராட்டங்கள் நடத்தப்படும் என்று நெடுமாறன் அறிவித்திருந்தார்.
தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தத் தீர்மானத்தின் நகல்களைஎரிக்கும் போராட்டம் இன்று நடைபெறும் என்றும் நெடுமாறன் கூறியிருந்தார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுமாறன் உள்ளிட்ட 50 தமிழர் தேசிய இயக்கத்தொண்டர்களை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். நெடுமாறனின் வீட்டிற்கே நேரடியாகச் சென்றுபோலீசார் அவரைக் கைது செய்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபாசுந்தரத்தையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பல புலிகளின் ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications