காவல் நிலையத்தில் கற்பழிப்பு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
வாணியம்பாடி காவல் நிலையத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாகசி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகவலை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
ஒரு திருட்டு வழக்குத் தொடர்பாக பழங்குடி இனத்தினர் வசிக்கும் காலனியைச் சேர்ந்த பிரகாஷ், அவரது தந்தைகோவிந்தசாமி ஆகியோர் வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த ஜனவரி 8ம் தேதி அவர்களைப் பார்க்க பிரகாஷின் மனைவி மணிமேகலையும் விஜயா என்ற பெண்ணும்சென்றனர். அப்போது இந்தப் பெண்களிடம் அந்தக் காவல் நிலையப் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர்.
மணிமேகலையை வாணியம்பாடி காவல் நிலையத்தில் வைத்தே தலைமைக் காவலர் கற்பழித்துவிட்டதாகக்கூறப்படுகிறது. மேலும் விஜயாவை சேலையை அவிழ்த்தும், நீ ரொம்ப அழகா இருக்கே என்று பேசியும்அத்துமீறியுள்ளன இந்தக் காக்கிகள்.
இது தொடர்பாக செய்திகள் வெளியில் வந்தவுடன் வேலூர் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் தவறு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பல்வேறுஅமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்தக் காவல் நிலையம் அடங்கிய வாணியம்பாடி தொகுதியில் இடைத் தேர்தல் வேறு நடக்கவுள்ளது.இதையடுத்து இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை ஒரே வாரத்தில முடிவடையும். போலீசார் தவறு செய்திருப்பது உறுதியானால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியினப் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அரசுஅனைத்து நிவாரண உதவிகளையும் வழங்கும்என்று ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் அவர் கூறுகையில், மணிமேகலையின் கணவர் பிரகாஷ், அவரது சகோதரர் குற ஆனந்தன், அவரதுதந்தை கோவிந்தசாமி ஆகியோர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன.
போலீஸ் ரெக்கார்டுகள்படி இந்தப் பெண்கள் ஜனவரி 8ம் தேதி காவல் நிலையத்துகே வரவில்லை. ஆனால், ஜனவரி13ம் தேதி வந்துள்ளதாகத் தெரிகிறது. தான் கற்பழிக்கப்பட்டாக மணிமேகலை இதுவரை எங்குமே புகார்தரவில்லை.
திருட்டு வழக்குகள், அது தொடர்பாக நடந்த நிகழ்வுகள் அனைத்ததும் விசாரிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications