குஜராத்துக்கு சிறப்பு படையை அனுப்ப பஞ்சாப் மறுப்பு
அகமதாபாத்:
குஜராத்தில் வன்முறையை அடக்க பஞ்சாப் போலீசாரை அனுப்ப மாட்டோம் என அம் மாநில அரசு கூறிவிட்டது.
குஜராத் முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி. கேபிஎஸ் கில் தான்ஒரு பட்டாலியன் பஞ்சாப் போலீஸ் சிறப்புப் படையை அனுப்புமாறு கோரியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியையும் சந்தித்துப் பேசினார்.
முதலில் படையை அனுப்ப பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டது. இதையடுத்து கில் நம்பிக்கையுடன் குஜராத்திரும்பினார். ஆனால், இன்று திடீரென தனது நிலையை பஞ்சாப் அரசு மாற்றிக் கொண்டது.
பஞ்சாபில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. குஜராத்தில் அம் மாநில பா.ஜ.க. அரசே வன்முறையைத் திட்டமிட்டு நடத்திவருவதை காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்த குஜராத் அரசு தவறிவிட்டதாகக் கூறிவருகிறது.
இந் நிலையில் தனது ஆட்சியில் உள்ள படையை அனுப்பியும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் இதுயாராலும் கட்டுப்படுத்தப்படாத வன்முறை என்று கூறப்படும் என்பதால் படையை அனுப்ப வேண்டாம் என்றுகாங்கிரஸ் மேலிடம் தடுத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
படையை அனுப்பினாலும் அதை சுதந்திரமாக செயல்பட குஜராத் அரசு விடாது என்று காங்கிரஸ் கருதுவதாகத்தெரிகிறது. இதனால், தனது மாநில போலீஸ் படையின் பெயரையும் சேர்த்துக் கெடுத்துக் கொள்ள காங்கிரஸ்விரும்பவில்லை.
இந் நிலையில் பஞ்சாப் போலீஸ் படையை கில் கேட்டாரா? அது பற்றி மத்திய அரசுக்கு ஏதும் தெரியாது என்றுகூறியுள்ளார் மத்திய உள்துறை இணையமைச்சரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான ஐ.டி.சாமி.
குஜராத் விவகாரத்தில் பா.ஜ.க. என்ன செய்கிறது என்பது அந்த சாமிக்கே வெளிச்சம்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications