ஜப்பானில் தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வேலை
சென்னை:
தமிழக அரசும் ஜப்பானில் உள்ள சைபர் க்ரூ கார்ப்பரேஷனும், தமிழகத்தில் உள்ள சாஃப்ட்வேர், ஹார்ட்வேர் இன்ஜினியர்களுக்குவேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
மாநில வேலை வாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநரும் அயல்நாட்டு வேலை வாய்ப்புத் துறை நிர்வாக இயக்குநருமான( Tamilnadu overseas manpower corporation) கே. செல்லமுத்துவும் , ஜப்பான் நிறுவன இயக்குநர் டெய்ஜி யோகயாமாவும்இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் க்ரு கார்பரேஷனுக்குஅனுப்பி வைக்கப்படும். அந்த பட்டியலில் இருந்து போதிய தகுதியுடைய டிப்ளமோ, பட்டதாரிகளை க்ரு கார்பரேஷன் தேர்வுசெய்யும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, க்ரு கார்பரேஷன், தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தும். அந்த தேர்வு முடிவுகள் உடனடியாகஅறிவிக்கப்படும். சம்பளம், பணி போன்ற விதிமுறைகளை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமும் ஜப்பான் நிறுவனமும்கலந்தாலோசித்து முடிவு செய்யும்.
இதற்கான வேலைகள் ஜூலை மாதத்துக்குள் தொடங்கப்பட உள்ளது. தற்போது 2000 பேர் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்இன்ஜினியர்கள் இந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இதுவரை 18,000 பேர் பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புக் கோரி பதிவுசெய்துள்ளனர். இவர்களில் 5,700 பேர் வேலை வாய்ப்பு பெற்று மலேசியா, சிங்கப்பூர், குவைத், அமெரிக்கா, அரேபியா போன்றபல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications