அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதைத் தடை செய்யும் சட்டம் தமிழக சட்டசபையில் இன்றுநிறைவேறியது.

இதைக் கண்டித்து திமுக, பா.ம.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதைஏதேச்சதிகாரமான, கருப்புச் சட்டம் என எதிர்க் கட்சிகள் கூறின.

அரசு ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தலைமைச்செயலக ஊழியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், குடிநீர், பால், ரேசன் போன்ற அத்தாவசிய பொருள்கள்வினயோகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

3 ஆண்டு சிறை:

இதையும் மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டாலும் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்க இந்தச் சட்டம்வகை செய்யும்.

இதற்கான சட்ட மசோதா கடந்த 6ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீது இன்று காலை விவாதம் தொடங்கியது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க் கட்சிஉறுப்பினர்கள் இது தொழிலாளர்களில் குரல்வளையை நெருக்கும் சட்டம் என்றும் அடிப்படை தார்மீகஉரிமையைப் பறிக்கும் சட்டம் என்றும் கூறினர்

உடனடியாக இந்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றனர்.

கருணாநிதி போட்ட திட்டம் தான்: அரசு

ஆனால், இதற்கு பதிளித்துப் பேசிய நிதியமைச்சர் பொன்னையன்,

இதே போன்ற சட்டம் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிங்களில் அமலில்உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 1981ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் இது போன்ற சட்டம்அமலில் இருந்தது.

மேலும் 1973 ம் ஆண்டு ஆட்சியில் இருந்த கருணாநிதி தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவற்காக ஒருவரைவுத் திட்டத்தை உருவாக்கினார். அதை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால், அதில் சில தவறுகள்இருந்ததால் அதை அரசு திருப்பி அனுப்பியது.

பின்னர் 1997ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதே கருணாநிதி இந்தச் சட்ட வரைவை உருவாக்கி தயாராகவைத்திருந்தார். அதைத் தான் இப்போது நாங்கள் அப்படியே அமலாக்கியிருக்கிறோம். கருணாநிதி உருவாக்கியஅந்தசச் சட்டத்தில் ஒரு வார்த்தையைக் கூட சேர்க்கவில்லை. இப்போது இந்தச் சட்டத்தை எதிர்த்து அவர் பேசுவதுஆச்சரியமாக உள்ளது.

இந்தச் சட்டம் நிறைவேறினாலும் கூட அதை தொழிலாளர்களுக்கு எதிராக அரசு பயன்படுத்தாது. அரசுஊழியர்களின் உரிமைகளை அரசு பறிக்காது

அத்தியாவசியப் பொருட்கள் வினியோகச் சட்ட விதிமுறைகளின் கீழ் இந்தக் கடும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலக அளவிலான பொருளாதார மந்தம் காரணமாக நாடும் மாநிலமும் கடும் பொருளாதார நெருக்கடியில்சிக்கியிருக்கும் நிலையில் அரசுக்கு ஊழியர்கள் உதவ வேண்டும். நிலைமை மோசமாகிவிட அவர்கள் காரணமாகஇருந்துவிடக்கூடாது. என்றார் பொன்னையன்.

எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு:

இதைத் தொடர்ந்து திமுக, பா.ம.க, த.மா.கா., காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தச் சட்டம் நிறைவேறியது.

கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள்அடுத்தடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைததனர் என்பதுநினைவுகூறத்தக்கது.

மீண்டும் இப்போது போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசைமிரட்டி வருகின்றனர்.

இந் நிலையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மட்டுமல்லாமல் அதற்கு ஆதரவு தருபவர்கள், போராட்டத்தைத் தூண்டுபவர்கள்,போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சக ஊழியர்களை வற்புறுத்துபவர்கள் ஆகியோர் மீதும் இச் சட்டத்தின் படிநடவடிக்கை எடுக்க முடியும்.

வேலைநிறுத்தம் செய்யப் போகிறோம் என்று ஊழியர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்தாலும் அதை இனிஅரசு ஏற்காது என்றும் இச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்ய மறுப்பதும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குஇணையானதாகவே கருதப்பட்டு இதே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் உள் இருப்புப்போராட்டத்தையும் தமிழக அரசு தடை செய்துள்ளது.

எதிர்க் கட்சிகள் கருத்து:

இந்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் இருந்து வெளியே வந்த எதிர்க் கட்சியினர் கூறியதாவது:

துரைமுருகன் (திமுக):

இது அராஜகமான சட்டம், இதை நிறைவேற்ற அரசுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. இதனால்வெளிநடப்பு செய்தோம்.

ஜி.கே. மணி (பா.ம.க.):

இது மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டம், சர்வாதிகார சட்டம்.

எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் (த.மா.கா.):

இது செல்லுபடியாகாத சட்டம், ஜனநாயக விரோதமானது.

பழனிச்சாமி (இந்திய கம்யூ.):

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் சட்டம். மோசமான சட்டம்

ஹேமச்சந்திரன் (மார்க்சிஸ்ட்):

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை ஒடுக்க முயலும் பாசிச சட்டம் இது.

லட்சுமணன் (பா.ஜ.க.):

இது அவசியமில்லாத, தேவையில்லாத சட்டம் என்றார்.

இதே போல மாநிலம் முழுவதும் இந்தச் சட்டத்துக்கு எதிராக குரல்களும் போராட்ட அறிவிப்புகளும் வரஆரம்பித்துள்ளன.

எப்படி இருந்தாலும் இது பொது மக்களுக்கு நிம்மதி தரும் சட்டம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+