குஜராத் போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவில் கூண்டோடு மாற்றம்: கில் அதிரடி
அகமதாபாத்:
குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியுள்ளார் அம் மாநில முதல்வரின் ஆலோசகராகநியமிக்கப்பட்டுள்ள கே.பி.எஸ். கில்.
பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பியான கில் தீவிரவாதத்தையும் வன்முறையையும் ஒடுக்குவதில் கை தேர்ந்தவர்.குஜராத் மதக் கலவரத்தை உலக நாடுகள் கண்டிக்க ஆரம்பித்ததையடுத்து வேறு வழியில்லாமல் அவரைஅனுப்பியது மத்திய அரசு.
குஜராத் மாநில போலீசார் பா.ஜ.க, வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ்., பஞ்சரங் தள் ஆகிய அமைப்புகளுடன் கூட்டணிவைத்துக் கொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த மாநில போலீசார் முழுவதுமாக நம்பாத கில் நிலைமையைக் கட்டுப்படுத்த பஞ்சாப் போலீசின்சிறப்பு அதிரடிப்படையை கேட்டுப் பார்த்தார். ஆனால், படையை அனுப்ப பஞ்சாப் அரசு மறுத்துவிட்டது.
இதையடுத்து மத்தியப் படைகளை கேட்டுப் பெற்றுள்ளார். இன்று டெல்லியில் இருந்து 120 பேர் கொண்ட 2சி.ஆர்.பி.எப். பட்டாலியன்கள் அகமதாபாத் வந்து சேர்ந்தன. மேலும் இரு பட்டாலியன்கள் வரவுள்ளன.
குஜராத்துக்கு அவர் வந்திருப்பதை மாநில பா.ஜ.கவிலேயே பலரும் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். பலஎம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இதையடுத்து தனக்கு மாநில அளவில் முழு அதிகாரம் தந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானியிடம் கில் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு முழு அதிகாரம் தருமாறு மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அத்வானிஉத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று கில்லிடம் மாநில காவல்துறையை முழுமையாக ஒப்படைத்தார் மோடி.
தனது கைக்கு அதிகாரம் வந்து சேர்ந்த கையோடு மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளை தூக்கி எறிந்துள்ளார்கில். வன்முறையாளர்களுக்குத் துணை போனதாகக் கருதப்படும் மூத்த அதிகாரிகளை நேற்று இரவோடு இரவாகதூக்கி அடித்துள்ளார்.
உயர் மட்டத்தில் உள்ள 14 அதிகாரிகள் நள்ளிரவில் மாற்றப்பட்டனர்.
அகமதாபாத்தில் தொடர்ந்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மாவட்ட காவல்துறை கமிஷ்னர் பி.சி.பாண்டேவுக்கு நேற்று நள்ளிரவில் வீட்டுக் கதவைத் தட்டி இடமாற்றல் உத்தரவு தரப்பட்டது. அவருக்குப் பதிலாககாவல்துறை சி.ஐ.டி. பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. கே.ஆர். கெளசிக் மாவட்ட போலீஸ் கமிஷ்னராகநியமிக்கப்பட்டுள்ளார்.
பாண்டேவுக்கு ஆயுதப் பிரிவு போலீசின் கூடுதல் டி.ஜி.பி. என்ற டப்பா பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்போதுஇந்தப் பதவியில் உள்ள ஏ.கே. பார்கவா சி.ஐ.டி. பிரிவின் டி.ஜி.பி. பதவி தரப்பட்டுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து கெளசிக் தான் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடக்கத்தது.
இவர் தவிர ஒரு இணை கமிஷ்னர், கூடுதல் கமிஷ்னர், 4 துணை கமிஷ்னர்களும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 2துணை கமிஷ்னர்கள் பா.ஜ.கவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் மாற்றப்படவில்லை.
முஸ்லீம் அதிகாரிக்கு பதவி:
முஸ்லீம்களின் நம்பிக்கையை முழுமையாக மாநில அரசு இழந்துவிட்டதால் அதை சீர்கட்ட ஒரு மூத்த முஸ்லீம்போலீஸ் அதிகாரியை தனது ஆலோசகராக கில் நியமித்துள்ளார்.
குஜராத் போலீஸ் அகாடமியில் இணை இயக்குனர் என்ற அதிகாரம் இல்லாத பதவியில் இருந்து வரும் ஏ.ஐ. சையத்என்ற அதிகாரியை கில் தனது முதன்மை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.
மாநில அரசிடம் போராடி அவரை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்துள்ளார் கில்.
வன்முறை தாண்டவம்:
இந் நிலையில் நேற்று ஒரு வாலிபரை நடுரோட்டில் எரிக்க முயன்ற கும்பலைத் தடுத்த தீயணைப்பு வீரர்கள் மீதுவன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தீயணைப்பு வீரர்களுக்கும் கத்திக் குத்து விழுந்தது. தீயணைப்புவண்டிகளுக்கும் ஆம்புன்சுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் 5 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து தங்ளுக்கு பாதுகாப்புர் கோரி தீயணைப்புப் படையினர் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
அகமதாபாத்தில் தாராபுரா பகுதியில் நேற்றிரவு வன்முறை நடந்தது. ஒரு வாலிபர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
இன்று காலை ஜமால்பூர் என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் பயங்கர கல்வீச்சு நடந்தது. ஒரு வாலிபர் எரித்துக்கொல்லப்பட்டார். இதையடுத்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இன்றுமட்டும் 4 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 42 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications