நாங்க கண்ணகி சிலையை பார்த்தோமே!
சென்னை:
சென்னை மெரீன கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அருங்காட்சியகத்தில் வைத்துப் பூட்டிவிட்டு யார் பார்வையிலும்படாமல் வைத்திருந்த தமிழக அரசு இன்று அதை திடீரென நிருபர்களுக்குக் காட்டியது.
நேற்று தான் யார் வந்தாலும் காட்டத் தயார் என்று கல்வியமைச்சர் தம்பிதுரை கூறினார். ஆனால், அது தொடர்பாக அனுமதிகேட்கச் சென்ற ஒரு பத்திரிக்கையை இழுத்தடித்தார் தம்பிதுரை. இதனால், சிலையை ஏதோ செய்துவிட்டார்கள் என்ற சந்தேகம்வலுத்தது.
இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இன்று திடீரென நிருபர்களுக்கு அழைப்பு விடுத்தார்தம்பிதுரை. என்னவோ ஏதோ என்று நிருபர்கள் அவரிடம் ஓடினர். வந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு எழும்பூர் எழும்பூர்அருங்காட்சியகத்த்குச் சென்றார் தம்பிதுரை.
அங்கே ஒரு அறையில் சிலை வைக்கப்பட்டிருந்ததைத் காட்டினாரர். மெரீன கடற்கரையில் கம்பீரமாக நின்றிருந்த அந்தச் சிலைபடுக்க வைக்கப்பட்டிருந்தது. பொழிவிழந்து போய் காணப்பட்டது.
கற்புக்கரசி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் 1967ஆம் ஆண்டு திமுக அரசால் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை மீது 5மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு லாரி மோதியது. இதில் சிலையின் பீடம் சேதமடைந்ததாக அரசு கூறியது.
அடுத்த சில தினங்களில் சிலை காணாமல் போனது. சிலை எங்கே என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்த பின்னர் தான் அதுஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது.
பீடம் சேதமடைந்ததாலும் அது போக்குவரத்துக்கு இடைஞ்சலான இடத்தில் இருந்ததாலும் அகற்றியதாக அப்போதைய முதல்வர்பன்னீர் விளக்கம் தந்தார். ஆனால், ஜெயலலிதா முதல்வராக வேண்டுமென்றால் சிலையை அகற்ற வேண்டும் என ஜோதிடர்சொன்னதாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால், சிலையை மட்டும் இத்தனை நாட்களாக அரசு காட்ட மறுத்து வந்தது. இதனால் சிலையை உடைத்து வீசிவிட்டார்கள்என்று வதந்தி பரவியது. இப்போது அந்தச் சிலையை மீண்டும் நிறுவுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கைத் தொடர்ந்தது திமுக.
சிலையை மீண்டும் நிறுவ 3 இடங்களை தேர்வு செய்து நீதிமன்றத்திடம் கொடுத்துள்ளது அரசு என்று நேற்று தான்பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் கூறினார்.
சிலை விவகாரம் தினமும் பெரிதாகிக் கொண்டே போவதால் இன்று தடாலடியாக நிருபர்களை அழைத்துப் போய் சிலையைக்காட்டினார் தம்பிதுரை.
சிலை சேதம் ஏதும் இன்றி அப்படியே இருந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications