சட்டசபையில் கண்ணகி பட்டபாடு
சென்னை:
கண்ணகி சிலை பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் இருக்கிறது. உயர்நீதிமன்றம் கூறும் இடத்தில் அந்த சிலை மீண்டும்நிறுவப்படும் என்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசுகையில், கண்ணகி சிலை பாதுகாப்பாகஉள்ளது. பார்க்க விரும்பினால் கல்வி அமைச்சர் ஏற்பாடு செய்வார் என்று சமீபத்தில் முதல்வர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஒரு பத்திரிக்கை சார்பில் கல்வி அமைச்சரை அணுகியபோது, சிலையை உடனடியாக காட்ட முடியாது. பொதுப்பணித்துறை வசம் சிலை உள்ளது. முறைப்படி கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும், கோப்புகள் அனுப்ப வேண்டும் என்றுகல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் தம்பித்துரை (இடையில் குறுக்கிட்டு): கண்ணகி சிலையை காட்டுவதற்கு அம்மா (முதல்வர்) அனுமதிஅளித்துள்ளார். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சம்பந்தப்பட்ட பத்திரிக்கை என்னை அணுகியது உண்மைதான். ஆனால் கேட்டு விட்டுச் சென்றதோடு சரி, அதன் பிறகு அவர்கள்வரவில்லை. நாளைக்கே வந்தால் கண்ணகி சிலையை பார்க்கலாம். அதற்கு அனுமதி அளிக்கிறேன். இதில் மறைப்பதற்கு ஒன்றும்இல்லை என்றார்.
துரைருகன்: எதற்கு இந்தப் பிரச்சினை, சிலையை இருந்த இடத்தில் வைத்து விட்டால் தொல்லை இல்லையே.
முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு: பிரச்சினை இப்போது கோர்ட்டில் இருக்கிறது. கோர்ட் உத்தரவு இல்லாமல் எப்படிசிலையை மீண்டும் வைக்க முடியும்?.
அமைச்சர் பன்னீர் செல்வம்: சிலை பத்திரமாகத்தான் இருக்கிறது. சிலையை மறுபடியும் எங்கே நிறுவலாம் என்று 3 இடங்களைதேர்வு செய்து கோர்ட்டிற்குத் தெரிவித்துள்ளோம். கோர்ட் சொல்லும் இடத்தில் சிலை நிறுவப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications