சைதையில் திமுக போட்டி வேட்பாளர் மனுத் தாக்கல்
சென்னை:
சைதாப்பேட்டையில் திமுக போட்டி வேட்பாளராக செங்கை சிவம் இன்று திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனால் திமுகவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை மாவட்ட திமுகவில் முக்கியப் புள்ளி செங்கை சிவம். இவர் பெரம்பூர் வட்ட திமுக செயலாளராக இருந்துவருகிறார்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் திமுகவின் சார்பில் மா.சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டுள்ளார். அவர்நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களுடன் இன்று தான் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இந்தத் தொகுதியில் அடங்கிய 134வது வார்டில் உள்ள ஆலந்தூர் பகுதியில் இன்று காலை தான் அவர் வீடு வீடாகச்சென்று வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். அவருக்கு பொது மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந் நிலையில் செங்கை சிவம் சில திமுகவினருடன் சேர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ளதேர்தல் அதிகாரி ஜெயேந்திர சேவியரிம் சைதாப்பேட்டை தொகுதிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். திமுகவேட்பாளரகவே அவர் வேட்பு மனு போட்டுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் கிட்டு தான் போட்டியிட வேண்டும் எனகருணாநிதி விரும்பினார். ஆனால், இதில் விருப்பமில்லை என்று கூறி கிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
அவர் யோசனைப்படி தான் மா.சுப்பிரமணியத்தை கருணாநிதி நிறுத்தினார்.
இந் நிலையில் செங்கை சிவம் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். திமுகவைப் பொறுத்தவரை மிகக்கட்டுக்கோப்பானது. கருணாநிதியின் பேச்சுக்கு மறுபேச்சு இருப்பதில்லை. இந் நிலையில் செங்கை சிவத்தின் செயல்தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கை சிவத்தை அதிமுக வளைத்துவிட்டதோ என்ற சந்தேகமும் திமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த செங்கை சிவம் போட்டியே ஒரு திமுகவின் செட்-அப் தான் என்று நமது நிருபரின் விசாரணையில்தெரியவந்துள்ளது.
சிவத்தை வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கத்திலும் கூட மனு தாக்கல் செய்ய வைக்க இருக்கிறார் கலைஞர்என்கிறார்கள். செங்கை சிவம் தலித் என்பதால் அச்சிறுப்பாக்கத்திலும் மனுத் தாக்கல் செய்ய முடியும்.
அதிமுகவின் முகத்தில் கரி பூச கலைஞர் போட்டிருக்கும் திட்டம் என்கிறார்கள்.
கலைஞரின் இந்த அரசியல் தந்திரம் குறித்த முழு விவரம் நாளை...தட்ஸ்தமிழ்.காமில்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications