புலிகள் மீது சந்திரிகா மீண்டும் பாய்ச்சல்
நியூயார்க்:
விடுதலைப்புலிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்த விரும்பவில்லை, சில உடனடி சலுகைகளை பெற்றுக்கொள்வதற்குத் தான் ஆர்வம் காட்டுகின்றனர் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இலங்கை அமைதிப் பேச்சு வார்த்தை நடக்கும் விதம் கவலை தரும் விதத்தில் உள்ளது. அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைப்புவிடுக்கும் முன்னரே தங்கள் அமைப்பின் மேல் உள்ள தடைகளை தளர்த்த வேண்டும், தங்களை சுதந்திரமாக நடமாட விடவேண்டும், தமிழ் மக்கள் வாழுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அரசாங்க கட்டிடங்களில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸ்படையை வாபஸ் பெற வேண்டும் என்று பாதுகாப்பை தளர்த்த வேண்டும் என்று புலிகள் வற்புறுத்துகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசுவதாக இருந்தால் அவர்களின் மீதான தடையை தற்காலிகமாகதளர்த்துவதைப் பற்றி யோசிக்கலாம்.
நேபாள மாவோயிஸ்டுகளுக்கு விடுதலைப் புலிகள் பயிற்சி தந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆதாரங்களை சேகரித்துவருகிறோம்.
இலங்கையில் 95 சதவீத தமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் தான் கொன்று குவித்துள்ளனர். அப்படி இருக்கும் போதுஅனைத்து தமிழர்களுக்காகவும் அவர்கள் எப்படி பேச முடியும். மேலும் அனைத்து தமிழர்களும் தனி தேசம் வேண்டும் என்றகோரிக்கையை விரும்பவில்லை.
பிப்ரவரி 22ம் தேதி முதல் தாய்லாந்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிரந்தர தீர்வுகாண விரும்பவில்லை. அவர்கள் சில சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். முக்கிய விஷயங்களை பேச அவர்கள் வந்த பின்னரேசலுகைகள் பற்றி யோசிக்க முடியும். மேலும் அவர்களது தனி நாடு கோரிக்கையை தவிர மற்றவற்றை பற்றி அவர்கள் பேச முன்வரவேண்டும்.
இந்தியா ஆதரிக்கிறது:
அமைதிப் பேச்சு வார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால் இந்தியா, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்இடையில் மத்தியஸ்தமாக இருக்க வேண்டும் நானும் கேட்கவில்லை; டெல்லியும் அதை விரும்பவில்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி, புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரியிருந்தது. ஆனால் அப்போதுஅவர்களின் இருப்பிடம் கண்டறியப்படவில்லை.
ஆனால் இப்போதைய அரசு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரவில்லை. அவ்வாறு இந்தியாமீண்டும் கோரிக்கை விடுத்தால், இலங்கை அரசு என்ன செய்யும்? என்று சந்திரிகா கேள்விக்கணை எழுப்பினார்.
அவரது பேச்சு அமைதிப் பேச்சுவார்த்தையையே அவர் விரும்பவில்லை என்பதைத் தான் உணர்த்துகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications