நெடுமாறன் மீது நடவடிக்கையா? ஜெ. விளக்கம்
சென்னை:
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எரிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே தான் நெடுமாறன் உள்ளிட்டவர்கள்கைது செய்யப்பட்டனர். ஆனால் நெடுமாறன் தீர்மான நகலை எரிக்காத காரணத்தால் அவர் மட்டும் விடுதலை செய்ய்பட்டார்என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்அறிவித்திருந்தார். ஆனால் திடீரென அவரை அதிகாலையில் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனால் எரிப்புப்போராட்டத்தில் அவர் கலந்து கொள்ள முடிவில்லை.
மாலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், எரிப்புப் போராட்டம் நடத்திய மற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா இது தொடர்பாக ஒழுங்கு பிரச்சினையைக் கிளப்பினார். அப்போது, சட்டசபையில்நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட நகலைக் கொளுத்தியதற்காக முன்பு திமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் சமீபத்தில் இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை எரித்த சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது நடவடிக்கை இல்லையா? என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, நெடுமாறன் மற்றும் சிலர் தீர்மான நகலை எரிக்கப் போவதாக அறிவித்து விட்டு ஒருஇடத்தில் கூடினர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதில் நெடுமாறன் தீர்மான நகலை எரிக்கவில்லைஎன்பதால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் நெடுமாறன் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் நகலை எரித்துள்ளனர். அவர்கள் இன்னும் காவலில்தான் இருக்கிறார்கள்.அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications