தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கக் கோரி தீர்மானம்: ஜெ. திட்டம்
சென்னை:
தமிழ் உள்பட 18 தேசிய மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று கோரி தீர்மானம்கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்தார்.
சட்டமன்றத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே. மணிகோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசுகையில், நாங்கள் மத்திய அரசின் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தபோது தேசியநிர்வாக செயல் திட்டம் வகுப்பதற்காக கூட்டம் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.
அப்போது செயல் திட்டத்தில் 18 மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையைசேர்க்க வைத்தேன். இது குறித்து ஆராய குழு அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், என்ன ஆனது என்றுதெரியவில்லை. குழுவை அமைக்கவில்லை.
இப்போது மத்திய அரசின் கூட்டணியில் இருப்பது உங்கள் கட்சி தான் (பா.ம.க.). நீங்கள் அங்கே தான் இதைவலியுறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு இங்கே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிறீர்கள். உங்கள்கடமையை மறக்கக் கூடாது.
அதே நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேறும்.
அத்தோடு தமிழ் மொழியை செம்மொழி ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications