ஜெயலலிதாவுக்கு இலங்கை தமிழ் அமைச்சர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை தமிழ்அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சரான டி.மகேஸ்வரன் இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு முதல்வர் அவர்களே, இலங்கையில தமிழர்கள் பட்டுவரும் இன்னல்களை சொல்லி விளக்க முடியாது.நீங்களே ஒரு நல்லெண்ணப் பயணமாக இலங்க்ைககு வந்து நிலைமையை நேரில் பார்த்து அறிய வேண்டும்.

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை உங்கள் அரசியல் எதிரிகளைச் சமாளிப்பதில் தான் ஆர்வம் காட்டிவருகிறீர்கள். அவர்களைச் சமாளிக்க நீங்கள் அரசியல்ரீதியில் எடுத்து வரும் முடிவுகள் இங்குள்ள தமிழர்களுக்குபெரும் தீமையைத் தான் விளைவிக்கும்.

1980களில் அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தியும், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும்இலங்கைத் தமிழர்களுக்கு பேருதவிகள் புரிந்தனர். அவர்களின் பாதையைப் பின்பற்றி நீங்களுக்கும் எங்களுக்குஉதவிட வேண்டும்.

இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு அமைதித் தீர்வு காண முயற்சித்து வரும் எங்கள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவுக்கு நீங்கள் முழு ஆதரவு தந்து உதவ வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மகேஸ்வரன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரனை பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என சட்டசபையில் சமீபத்தில் ஜெயலலிதா தீர்மானம்நிறைவேற்றியுள்ள நிலையில் அந் நாட்டு அமைச்சரிடமிருந்து இந்தக் கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு எதிராக புலிகளின் ஆதரவுடன் இலங்கைத் தமிழர் பகுதிகளில் போராட்டமும்நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+