தாலியைப் பறிக்க முயன்ற திருடனை கடித்து விரட்டிய பெண்
சென்னை:
தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்ற திருடனை, கடித்து விரட்டினார் சென்னையில் வசிக்கும் மதுரையைச் சேர்ந்த வீரப் பெண்.
சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் லலிதா. தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்குச்சென்றுவிட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.
இந்தக் குடும்பத்தினர் அண்ணாநகருக்கு பஸ்சில் வந்திறங்கினர். பஸ் ஸ்டாப்பில் இருந்து தங்களது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மணி காலை 6.
5-வது அவன்யூ மற்றும் 11-வது தெரு சந்திப்பில் 3 பேர் மொபட்டுடன் நின்று கொண்டிருந்தனர். லலிதா குடும்பத்தினர்அவர்களை நெருங்கியதும், 3 பேரில் ஒருவன் லலிதா அணிந்திருந்த தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றான்.
இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த லலிதா உடனே சுதாரித்துக் கொண்டார். திருடனின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர் அவனது கையில் பலமாகக் கடித்தார்.
இந்தக் கடியை எதிர்பாராத திருடன் அய்யோ அம்மா என்று கதறினான். கையை உருவிக் கொண்டு ஓட முடியாத அளவுக்கு கடிபலமாக இருந்தது.
அதற்குள் லலிதாவின் கணவர் மற்றும் உடன் வந்தவர்கள் மொபட்டுடன் நின்று கொண்டிருந்தவர்களைப் பிடிக்க முயன்றனர்.ஆனால், அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
டிபட்ட திருடனும் கையை போராடி விடுவித்துக் கொண்டு , அவர்களுடன் சேர்ந்து ஓடினான்.
பின்னர் திருமங்கலம் போலீஸில் லலிதா புகார் செய்தார். அவரைப் பாராட்டிய போலீஸார், திருடர்கள் குறித்து சென்னைநகரிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சென்னை நகரில் கையில் கடிபட்ட காயத்துடன் யார் வந்தாலும் அவர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள போலீஸ்நிலையத்திற்குத் தகவல் கொடுக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications