குஜராத் போலீஸ் அதிகாரிகள்- முஸ்லீம்கள் சந்திப்பு
அகமதாபாத்:
கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 900 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மைமக்களின் நம்பிக்கையை முழு அளவில் இழந்து போய் நிற்கிறது குஜராத் போலீஸ்.
இதனால் அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சிகளில் உயர் போலீஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளார்அம் மாநில முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.எஸ். கில்.
இதைத் தொடர்ந்து சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளனர்உயர் போலீஸ் அதிகாரிகள்.
வன்முறையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அகமதாபாத் நகரின் ஜூகாபுரா பகுதிக்கு சிறப்பு ஐ.ஜி.பி.பி.பாண்டே தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று சென்றனர். இந்தப் பகுதியில் மூன்றரை லட்சம்முஸ்லீம்கள் வசித்து வந்தனர்.
தொடர்ந்து சிறுபான்மையினர் கொல்லப்பட்டு வருவதால் பாதி பேர் ஊரைவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடிவிட்டனர்.
இந்தப் பகுதியின் மூத்த முஸ்லீம் தலைவர்களை பாண்டே தலைமையிலான போலீஸ் குழு சந்தித்துப் பேசியது.
இடம்பெயர்ந்து சென்றுவிட்ட முஸ்லீம்கள் இந்தப் பகுதிக்குத் திரும்பியவுடன் மிகப் பெரும் அளவில் பதில்தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம் போலீசார் மத்தியில் இருந்தது.
இதனால் தான் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அப் பகுதியினருடன் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்நிருபர்களிடம் பேசிய போலீசார், அந்தப் பகுதி முஸ்லீம் பெரியவர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொண்டுவருகின்றனர். நிச்சயமாக பதில் கலவரத்தில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் உறுதிமொழி தந்தனர்.
கடும் கோபத்தில் உள்ள வாலிபர்களை அடக்கி வைப்பதாகவும் உறுதிமொழி தந்தனர். கலவரம், வன்முறையில்ஈடுபடும் தங்கள் சமூகத்தினரை தண்டிக்கவும் முன் வந்துள்ளனர். இந்த நிலையிலும் இந்த சமூகத் தலைவர்களின்பொறுப்புணர்வு மிகுந்த நம்பிக்கை தருகிறது என்றனர்.
கலவரக்காரக்களுக்கு போலீசாரே ஆதரவாக நடந்து கொண்டதாகவும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்குஉடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் பெரும் நலன் பயக்கும்என்று கருதப்படுகிறது.
கடந்த 2 மாதங்களில் போலீஸ் தரப்பில் பல தவறுகள் நடந்தன என்பதை அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
முஸ்லீம்கள் தொடர்பாக மாநில அரசின் செயல்களிலும் போலீசாரின் பார்வையிலும் இப்போது நல்ல மாற்றம்ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது என்கிறார் ஜூகாபுரா பகுதியின் பஞ்சாயத்துத் தலைவரான ஹாஜிபாய்.
இது போன்ற போலீஸ்-சிறுபான்மையினர் சந்திப்பு மாநிலம் முழுவதும் நடக்க ஆரம்பித்துள்ளது. கில்புண்னியத்தில் குஜராத் போலீசார் மாறி வருகின்றனர். விரைவில் அமைதி திரும்பினால் தேசத்துக்கு நல்லது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications