திருவண்ணாமலை கும்பாபிஷேகத்தைக் குலைக்க பயங்கர சதி: 20 மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்
சென்னை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது தீவிரவாதிகள் மனிதவெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவினருக்கு திடுக்கிடும் தகவல் வந்துசேர்ந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேம் நடைபெறவுள்ளது. இதில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில் உயர் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய உளவுத் துறை அதிகாரிகள், கும்பாபிஷேகத்தின்போது பாகிஸ்தான் மற்றும்ஆப்கானிஸ்தான் ஆதரவு தீவரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து பெரும் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.
20 முதல் 25 மனித வெடிகுண்டுகள் வரை திருவண்ணாமலைக்கு வரவுள்ளதாகவும் அவர்கள் திடுக்கிடும்தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய மாவட்ட போலீசாருக்கு ஆட்சியர்ஆணையிட்டார்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசாரை திருவண்ணாமலையில் குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை தவிர சுற்றியுள்ள நகரங்களில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள், ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் காவல்துறை கண்காண்ப்பு சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
காரில் கிரிவலம் வர ஜெ. திட்டம்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர்ஜெயலலிதா காரில் அமர்ந்தவாரே கிரிவலம் வரத் திட்டமிட்டுள்ளார்.
இந்தக் கோவில் அமைந்துள்ள குன்றை நடந்தே ஒருமுறை சுற்றி வருவது தான் கிரிவலம் என்றுஅழைக்கப்படுகிறது. இது பல கிலோமீட்டர் தூரம் கொண்டது. ஆனால், கிரிவலம் செய்வது மிகுந்த நலன்களைத்தரும் என்பது நம்பிக்கை.
இதனால் இங்கு வரும் பக்தர்கள் தவறாது கிரிவலம் செய்வது வழக்கம்.
கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பே திருவண்ணாமலை வரும் ஜெயலலிதா பெளர்ணமிதினமான 25ம் தேதி கார் மூலம் கிரிவலம் வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மூட்டு வலி பிரச்சனை காரணமாக ஜெயலலிதாவால் தொடர்ந்து நீண்ட தூரம் நடக்க இயலாது என்பதாலும் அவரதுபாதுகாப்புக் கருதியும் கார் மூலமே கிரிவலம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகதக் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications