கருணாநிதியின் நவீன திருவிளையாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை இடைத் தேர்தலில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவான செங்கை சிவம் 3 தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் செய்தது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவது தேர்தல் கமிஷன் விதிகளுக்கு முரணானது. அப்படிச்செய்தால் அவரது அனைத்து வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும். இது தான் கடந்த தேர்தலில்ஜெயலலிதாவின் விஷயத்தில் நடந்தது.

மேலும் இவ்வாறு 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுபவர் மீது வழக்குத் தொடரவும் தேர்தல் கமிஷனுக்குஉரிமை உண்டு. ஆனால், ஜெயலலிதா விஷயத்தில் தேர்தல் கமிஷன் இதைச் செய்யவில்லை.

ஜெயலலிதா கடந்த தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்தும் அவர் மீது சட்டப்படிதேர்தல் கமிஷன் வழக்குத் தொடர வேண்டும் என்று கோரியும் திமுக எம்.பி. குப்புசாமி வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு தாக்கலானபோது மத்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஒரு உத்தரவுபிறப்பித்தது. அதில், ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து அறிக்கை அனுப்புமாறுகூறப்பட்டிருந்தது. மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியதா, இல்லையா என்பது தெரியவில்லை.

அதே போல ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும்தெரியவில்லை.

இந் நிலையில் தான் செங்கை சிவத்தை 3 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்திருக்கிறது திமுக.இப்போது இவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

அதே போல இவர் மீது தேர்தல் கமிஷன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால்அதையே சுட்டிக் காட்டி ஜெயலலிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரும்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அவரது பதவிக்குக் கூட பிரச்சனை வரலாம்.

தேர்தல் விதிகளுக்கு மாறாக செங்கை சிவத்தை திமுக தலைமை நிறுத்தியுள்ளது. இதனால் தான் அவர் வேட்புமனுத்தாக்ல் செய்த விஷயத்தில் திமுக அமைதி காத்து வருகிறது. சும்மா பெயருக்கு விளக்கம் கேட்டு ஒருநோட்டீசையும் திமுக அவருக்கு அனுப்பும் என்று தெரிகிறது.

இதனால் அவராகவே வேட்பு மனு தாக்கல் செய்தது போல ஆகிவிடும். அவருக்கு எதிராக தேர்தல் கமிஷன்நடவடிக்கை எடுத்தாலும் அது திமுகவை பாதிக்காது. அதே நேரத்தில் அவர் மீது எடுக்கப்படும் அதேநடவடிக்கையை ஜெயலலிதா மீதும் எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தும்.

செங்கை சிவம் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் ஜெயலலிதா மீதும் எடுக்க வேண்டும் என்பதால் தேர்தல் கமிஷன்அமைதியாகிவிடவும் வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட நிலையில் யாராவது ஒரு வழக்கறிஞர் மூலம் இந்த இருவர்மீதும் நடவடிக்கை கோரி திமுக மறைமுகமாக வழக்குப் போடலாம்.

எப்படியிருந்தாலும் செங்கை சிவத்தால் ஜெயலலிதாவுக்கு பெரும் தலைவி காத்திருக்கிறது.

எனக்குத் தெரியாதே....

நேற்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, செங்கை சிவம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தது குறித்து எங்களுக்குஏதும் தெரியாது என்றார். மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 2 நாட்கள் ஆன பிறகு அவர் இவ்வாறு கூறியதை எந்தபத்திரிக்கையாளரும் நம்பவில்லை.

செங்கை சிவத்தை வைத்து திமுக திருவிளையாடல் புராணத்தை அரங்கேற்றுகிறது என்பது தான் நிருபர்கள்மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+