ஏர்வாடி பரிதாபம்: ஜெ.விடம் கமிஷன் அறிக்கை சமர்ப்பிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஆண்டு ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் 27 மன நோயாளிகள் இறந்தசம்பவம் குறித்து விசாரணை செய்த ராமதாஸ் விசாரணை கமிஷன், இன்று தன்னுடைய அறிக்கையை முதல்வர்ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தது.

இந்த மனநலக் காப்பகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 6ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில்எப்படித் தப்பிப்பது என்று கூடத் தெரியாமல் 27 அப்பாவி மன நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் இந்த மன நோயாளிகளைச் சங்கிலிகளால் கட்டிப் போட்டு வைத்ததனாலும் அவர்கள் இந்தப் பயங்கரமானதீ விபத்திலிருந்து தப்ப முடியாமல் போயிற்று.

மன நோயாளிகள் காப்பகம் என்ற பெயரில் அப்பகுதியில் பலரும் ஒரு தொழிலாகவே செய்து வந்தனர். தொழில்போட்டி மற்றும் பொறாமை காரணமாகவே யாரோ தன்னுடைய காப்பகத்தில் தீ வைத்து விட்டதாக சம்பவம் நடந்தகாப்பகத்தின் உரிமையாளரான முகைதீன் பாதுஷா கூறினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் ஏர்வாடியில் உள்ள பல்வேறு மனநலக் காப்பகங்களும் தமிழக அரசின்உத்தரவுப்படி மூடப்பட்டன. அங்கிருந்த மன நோயாளிகள் அனைவரும் ராமநாதபுரம், மதுரை மற்றும்சென்னை-கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ராமதாஸ் தலைமையிலான ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வந்தது.

கடந்த ஒன்பது மாதங்களாக விசாரணை நடத்திய ராமதாஸ், இன்று தன்னுடைய அறிக்கையை ஜெயலலிதாவிடம்சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசுவெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மன நோயாளிகளுக்கான தனிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்றுஅப்போதே நல்வாழ்வுத்துறை அமைச்சர் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+