நக்கீரன் நிருபரை போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் நக்கீரன் நிருபரான சிவசுப்பிரமணியத்தைபோலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் நடந்த தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் கடத்தியது ஆகியவைதொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம், பின்னர் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம்தொடர்பாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் மேலும் சில தகவல்களை அறிவதற்காக, அவரை 15 நாள் போலீஸ் காவலில்வைக்க உத்தரவிடும்படி தாளவாடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்தநீதிபதி பாக்கியராஜ் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நக்கீரன் நிருபரிடம் போலீசார் 2 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தலாம். அதன்படி வரும் 15 மற்றும் 16 ஆகியதேதிகளில் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் உள்ள அறையில்வைத்து விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையின்போது வக்கீல்கள் யாரும் உடன் இருக்கக்கூடாது. நிருபருக்கு தேவையான நீர், தேனீர்போன்றவற்றை போலீசார் வழங்க வேண்டும்.
பின்னர் 16ம் தேதி மாலை விசாரணை முடிந்ததும், சிறைக்கு பாதுகாப்புடன் கூட்டிச் செல்ல மாஜிஸ்திரேட்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications