3 தொகுதிகளில் மனு தாக்கல் ஏன்? - செங்கைசிவம் விளக்கம்
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் மனுதாக்கல் செய்ததற்கான காரணத்தை வேட்புமனு பரிசீலனை முடிந்தபின் அறிவிப்பேன் என்று முன்னாள் திமுக எம்.எல்.ஏவான செங்கை சிவம் கூறினார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுகவின் போட்டிவேட்பாளராக செங்கைசிவம் மனுதாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சட்டப்படி ஒருவர் அதிகப்படியாக இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். எனவே,செங்கை சிவத்தின் மனுக்கள் நிச்சயம் நிராகரிக்கப்படும்.
ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் என்ன கதி ஏற்படும் என்பதை மக்களுக்கு எடுத்துககூறுவதற்காக, திமுக தலைமையே செங்கை சிவத்தை இவ்வாறு மூன்று தொகுதிகளிலும் மனுத் தாக்கல் செய்யஅறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலின்போது, நான்கு தொகுதிகளில் முதல்வர்ஜெயலலிதா வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததால், அவர் அத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போயிற்று.
ஆனால் இதற்கு திமுகதான் காரணம் என்று இப்போது வரை ஜெயலலிதா குற்றம் சாட்டிக் கொண்டுதான்இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாகத்தான் செங்கை சிவம் மூலமாக தற்போது மூன்றுதொகுதிகளிலும் அவரை மனுத் தாக்கல் செய்ய திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் மூன்று தொகுதிகளிலும் ஏன் மனுதாக்கல் செய்தேன் என்பதற்கான விளக்கத்தை செங்கை சிவம் இன்னும்தரவில்லை.
உண்மையான காரணத்தை வேட்பு மனு பரிசீலனை முடிந்தபின் விளக்குவேன்; இது பற்றி வேறு எதுவும் இப்போதுகூறமுடியாது என்று நேற்று அவர் நிருபர்களிடம் கூறினார்.
வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications