ராணுவ கமாண்டர்களுடன் அத்வானி முக்கிய ஆலோசனை
டெல்லி:
காஷ்மீரில் ராணுவக் குடியிருப்பின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தருவது குறித்து இன்றுராணுவ கமாண்டர்களுடன் உள்துறை அமைச்சர் அத்வானி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவும்கலந்து கொண்டனர்.
ராணுவ கமாண்டர்கள், மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உயர் ராணுவ அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சரே நேரடியாக ஆலோசனையில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.
எல்லைப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுவிட்டதால் காஷ்மீரின் உள் பகுதியில் பாதுகாப்புபலவீனமடைந்திருப்பதாக இக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து காஷ்மீருக்குஅதிக அளவிலான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்ப இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் சில முக்கிய முடிவுகளும் இக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த பரூக்அப்துல்லா எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்க மறுத்துவிட்டார். ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
முன்னதாக இக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை கோவாவில் இருந்து டெல்லி செல்லும் வழியில்விமானத்தில் நிருபர்களிடம் பேசிய அத்வானி,
தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருவதுவேதனைக்குரியது. பாகிஸ்தான் மீது மட்டுமல்ல இந்த நாடுகள் மீதும் இந்தியா கோபம் கொண்டுள்ளது.
இந்தியாவின் பொறுமை காலியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பாகிஸ்தானுக்கு சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தருவோம் என்றார்.
ராணுவத் தளபதி கோபம்:
இப்போது நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபனும்,பாகிஸ்தான் மீது ராணுவரீதியில் நெருக்குதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்டார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான திட்டவட்டமாக ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. ஆனால், அது எந்தவிதமான நடவடிக்கையாக இருக்கும் என்று நிருபர்களிடம் கூறமுடியாது. அரசுடன் விவாதித்து வருகிறோம். விரைவில் ஒரு தீவிர நடவடிக்கை இருக்கும் என்றார்.
வாஜ்பாய் ஆலோசனை:
இன்று பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவை சகாக்களுடன் ஜம்மூ நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினர்.ஜம்மூவில் இருந்து டெல்லி திரும்பிய பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் நிலைமை குறித்து விளக்கினார்.
பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து எதிர்க் கட்சிகளுடனும் பேச மத்திய அரசு திட்டமிட்டுளளது.
பாகிஸ்தான் பதற்றம்:
இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எல்லையில் படைகளைக்குவித்து வைத்துள்ள இந்தியா, தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக எந் நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்றுஅந் நாடு கருதுகிறது.
இதையடுத்து தனது ராணுவ ஜெனரல்கள், கமாண்டர்களுடன் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானின் த டான் செய்தித் தாள் தெரிவிக்கிறது.
தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதலா?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ்மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று ராணுவ கமாண்டர்களடன் அத்வானி பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது. பிரதமரும் எதிர்க்கட்சிகளுடன் பேசவுள்ளார்.
சில தினங்களில் தீவிர நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications