மக்கள் குமுறிப் போராடும் நேரம் வந்துவிட்டது: கருணாநிதி
சென்னை:
அதிமுக அராஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் குமுறிப் போராடுவதற்கான வாய்ப்பாக இந்த இடைத் தேர்தலைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரான கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய இந்த மூன்று தொகுதிகளைப் பொறுத்தவரையில்எனக்கு எவ்வளவு உற்சாகம் உள்ளதோ அந்த அளவுக்கு மனச் சங்கடமும் இருக்கிறது.
தொண்டர்களுடன் தோளோடு தோள் கொடுத்து இதுபோன்ற தேர்தல்களில் உழைத்திட என்னுடையஉடல்நிலையும் இடம் கொடுக்கவில்லையே என்ற வேதனையும் என் மனச் சங்கடத்தை அதிகரித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த 65 ஆண்டுகளாக தமிழகத்தில் நான் போகாத ஊர்களோ கிராமங்களோ இல்லைஎன்றே கூறலாம். இப்போது எனக்கும் சேர்த்து என்னுடைய உடன் பிறப்புக்கள் எனக்கும் சேர்த்து என் பணியைத்தொடர்வார்கள்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதையும் ஏகவசனத்தில் எதிரிகளைத் தாக்குவதையும் இல்லாததை இட்டுக்கட்டிப்பேசுவதையும் திமுக தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்.
நம்மை எதிரிகள் எந்தவிதமான வசைமாரிப் பொழிந்தாலும் அதற்கெல்லாம் பதில் சொல்வது வீண் வேலை என்றுகருதி, ஆக்கபூர்வமாகத் தொண்டர்கள் செயல்பட வேண்டும்.
அதிமுகவின் அராஜக ஆட்சியால் கொதித்துப் போயுள்ள மக்கள் குமுறிக் கொண்டு போராடுவதற்குத் தயாராகிவிட்டனர். அதற்கு இந்த இடைத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி வீரர்களாக என் கரம் குலுக்க வைத்திடுமாறுதொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications