இனி குடும்பத் தலைவர் வந்தால் தான் ரேஷனில் அரிசி !
சென்னை:
குடும்பத் தலைவர்களே ரேஷன் கடைக்கு நேரடியாக வந்தால் தான் அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுபுது உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரிசி முதல் சர்க்கரை வரை பாமாயில் முதல் கெரசின் வரை ரேஷனில் எது போட்டாலும் வாங்கக் கூடிய நடுத்தரக்குடும்பங்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களும் தான் நம் நாட்டில் அதிகம்.
இதுவரை வீட்டில் உள்ள யாராவது ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவது தான் நம்முடையவழக்கம். ஆனால் இனிமேல் குடும்பத் தலைவர்களே நேரடியாக ரேஷன் கடைக்குச் சென்றால் தான் அரிசிகிடைக்குமாம்.
வரும் ஜூலை 1ம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதற்கு முன்னதாகஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 24 கூப்பன்கள் வழங்கப்படும்.
குடும்பத் தலைவரே நேராக ரேஷன் கடைக்குச் சென்று இந்தக் கூப்பனைக் கொடுத்தால் தான் அரிசி கிடைக்கும்.
இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் 24 கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
ரேஷன் அரிசி தரமாக உள்ளதால் தற்போது ரேஷன் கடைக்கு வந்து அரிசி வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளதாகக் கூறுகிறது தமிழக அரசு.
இதுவரை ஒரு மாதத்திற்கு 1.8 லட்சம் கிலோ அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தற்போது ஒருமாதத்திற்கு 2 லட்சம் கிலோவுக்கும் அதிகமான அரிசி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications