காஷ்மீரில் மிக பயங்கர குண்டு வெடிப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அரசின் தலைமைச் செயலகம் அருகே இன்று நடந்த மிகப் பெரிய குண்டு வெடிப்பில்ஒருவர் இறந்தார். 16 பேர் படுகாயமடைந்தனர்.

சில தினங்களுக்கு முன் ஜம்மூவில் ராணுவக் குடியிருப்பின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தகுண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும இந்தப் பகுதியில் தான் மாநில போலீஸ் தலைமையகமும் தீயணைப்புப்படை அலுவலகமும் உள்ளது.

வெடிகுண்டை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஸ்கூட்டரில் மறைத்த தீவிரவாதிகள் அதை நடுரோட்டில்நிறுத்தினர். பின்னர் ரிமோட் கண்ட்டோல் மூலம் இயக்கி வெடிக்கச் செய்தனர். முன்னதாக துப்பாக்கியாலும்சுட்டனர். இதையடுத்து மக்கள் கலவரமடைந்து சிதறி ஓடியபோது இந்த குண்டை அவர்கள் வெடிக்கச் செய்தனர்.

பிற்பகல் 3.45 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குவந்தனர். பாதுகாப்புக்காகவும் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை செய்யும் பலமுறை வானை நோக்கி சுட்டனர்.அனைவரையும் கலைந்து போகச் செய்துவிட்டு அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

வெடிகுண்டு சிதறியதில் 17 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால், இதில் அப்துல் சலாம் தர் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

குண்டுவெடிப்பில் பல கடைகளும் சுக்குநூறாயின. குண்டு வெடித்த சப்தம் 3 கி.மீ. தூரத்தில் கூட கேட்டது. இதனால்நகர் முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் விவாதம்:

தீவிரவாத்தை ஒடுக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து விவாதம் நடந்து வரும்சூழ்நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், தீவிரவாதிகளைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகக்கூறினார். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் வாஜ்பாயும், உள்துறை அமைச்சர் அத்வானியும் பேசவுள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்கஎடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து அவர்கள் விளக்குவர்.

கூடியது பாதுகாப்பு கவுன்சில்:

இந் நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று டெல்லியில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் ராணுவத் தளபதி பத்மநாபன், விமானப் படைத் தலைவர் கிருஷ்ணசாமி, பிரதமரின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுவத் தளபதிவி.பி.மல்லிக்கும் இக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இக் கூட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விளக்கப்படவில்லை.

எல்லையில் பதற்றம் என்கிறது பாக்:

இந் நிலையில் தான் செய்து வரும் சேட்டைக்கு இந்திய எந்த நேரமும் பதிலடி தரலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான்உள்ளது.

அந் நாட்டு செய்தித்துறை அமைச்சர் நிஸ்ஸார் மேமோன் கூறுகையில், எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்றார்.

ஏவுகணை விட்டு மிரட்ட முஷாரப் திட்டம்:

இதற்கிடையே பதற்றமான இந்தச் சூழ்நிலையில் தனது வீரத்தைக் காட்டிக் கொள்வதற்காக ஏவுகணைச் சோதனைநடத்த அந் நாட்டு ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்ந்து தனது பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் அரசியல்கட்சித் தலைவர்களுடனும் பேசுவார் என்றும் அப்சர்வர் என்ற அந் நாட்டு ஆங்கில நாளிதழ் தெரிவிக்கிறது.

தனது பிரச்சனைகளை திசை திருப்பவே முஷாரப் ஏவுகணை சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அப்சர்வர்கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+