பெங்களூரில் மின் கோபுரம் சரிந்து விழுந்து 7 தமிழக தொழிலாளர்கள் சாவு
பெங்களூர்:
பெங்களூரில் அமைக்கப்பட்டு வந்த மிகப் பெரிய மின்சார கோபுர சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்திய மின் கிரிட் கழகத்திற்காக பெங்களூர் ஊரக மாவட்டம் சோலூரில் கொரியாவின் ஹூயுண்டாய் கட்டுமானநிறுவனம் மின்சார கோபுரங்களை நிறுவி வருகிறது. கோலாரில் இருந்து ஹூடி என்ற இடத்துக்கு இடையே இந்தஇரும்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த கோபுரங்களில் உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சார வயர்களால் இணைக்கப்பட்டு வருகின்றன.
சோலூரில் இதே போன்ற கோபுரத்தின் உச்சியில் உயர் அழுத்தம் கொண்ட மிகத் தடிமனான மின் கம்பிகளைஇணைத்துக் கொண்டிருந்தபோது கோபுரம் ஒரு பக்கமாக மண்ணில் புதைந்தது. தொடர்ந்து சரிந்தது.
இதில் அந்தக் கோபுரத்தில் ஏறி நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்தனர்.
அவர்கள் மீது அந்த இரும்புக் கோபுரம் விழுந்ததில் சிலர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் சிலர் கோபுரம்சரிந்ததில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தனர். அவர்கள் மீது மண் சரிந்து இறந்தனர். இவர்கள் அனைவருமேதமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
காயமடைந்த பலரும் ஹோஸ்கோட்டில் உள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேஸ் கட்டர்கள் மற்றும் கிரேன்கள் உதவியுடன் தான் இரும்புக் கோபுரத்தை சிதைத்து உடல்களை மீட்க முடிந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹூயுண்டாய் கட்டுமான நிறுவனத்தின் மீது அலட்சியமாக இருந்ததாக போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications