பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாயின: 6 பேர் முதலிடம்
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 4.98 லட்சம் மாணவ-மாணவிகளில் 84.55சதவீதத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.
1200 மதிப்பெண்களுக்கு 1177 மதிப்பெண்கள் பெற்று 3 மாணவர்களும் 3 மாணவிகளும் மாநில அளவில்முதலிடம் பெற்றுள்ளனர். அவர்களின் விவரம்:
1. கார்த்திக்- சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
2. விஸ்வநாதன்- சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி
3. பிரவீன் குமார்- திருச்செங்கோடு வித்யவிகாஸ் பள்ளி
4. கோதை நாச்சியார்- திருச்செங்கோடு வித்யவிகாஸ் பள்ளி
5. இந்துப் பிரியா- ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி
6. நந்தின தேவி- தூத்துக்குடி செயிண்ட் கிராஸ் பள்ளி ஆகியோர்
1176 மதிப்பெண்கள் பெற்று 2 மாணவர்களும், 1174 மதிப்பெண்கள் பெற்று 3 மாணவர்களும் மாநில அளவில்2வது 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெறுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 1.26 சதவீதம் அதிகமாகும்.
மாணவிகள் 87.20 சதவீதமும் மாணவர்கள் 81.90 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர்.
2,66,146 பேர் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
2,965 பேர் கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். 1,826 பேர் வேதியியல் பாடத்திலும், 986 பேர்இயற்பியல் பாடத்திலும், 55 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் தளங்களில் காணலாம்.இதுதவிர ஏர்டெல் தொலைபேசி நிறுவனமும் தொலைபேசி மூலம் முடிவுகளை அறிவிக்கிறது. 044-98400-400 என்ற தொலைபேசி எண்மூலமும் முடிவுகளை கேட்டறியலாம்.
மதிப்பெண்களுடன் மாணவர்களின் வெற்றி-தோல்வி விவரம் காலை 11 மணிக்கே தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும்ஒட்டப்பட்டுவிட்டன. வரும் 25ம் தேதி அந்ததந்தப் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும்.
ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் 6 வாரத்திலேயே மீண்டும் தேர்வெழுத வகை செய்யும் புதியதிட்டமும் அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் தோல்வியடையும் மாணவர்கள் ஓராண்டு வீணாகிவிட்டதே என்ற கவலையேபட வேண்டியஅவசியம் இல்லை. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி பெற்றோர் மற்றும் மாணவர்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் கல்விஅமைச்சர் தம்பிதுரை.
இந்த மறு தேர்வுக்கான தேதி 2 நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் முதலில் 25ம் தேதி தான் வெளிவர இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 8 நாட்கள் முன்னதாகவே முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. பொது நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமாணவர்களை காத்திருக்க வைக்க அரசு விரும்பாததால் முன் கூட்டியே முடிவுகளை அறிவித்துள்ளது.
முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான கார்த்திக் கூறுகையில், நான் எலெக்ட்ரானிக் கம்யூனிகேசன்சில் பி.ஈ. படிக்க விரும்புகிறேன்.அடுத்து எம்.பி.ஏ. படிக்கவும் விரும்புகிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications