இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின்றன.
சுமார் 5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி இயக்குனரகம்அறிவிக்கிறது.
12 மணிக்கு மேல் இந்த முடிவுகள் கீழ்கண்ட வெப்சைட்களில் வெளியாகும்.
சுமார் 5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
இதுதவிர ஏர்டெல் தொலைபேசி நிறுவனமும் தொலைபேசி மூலம் முடிவுகளை அறிவிக்கிறது. 044-98400-400 என்ற தொலைபேசி எண்மூலமும் முடிவுகளை கேட்டறியலாம்.
மதிப்பெண்களுடன் மாணவர்களின் வெற்றி-தோல்வி விவரம் காலை 11 மணிக்கே தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும்ஒட்டப்பட்டுவிடும். வரும் 25ம் தேதி அந்ததந்தப் பள்ளிகளில் சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் 6 வாரத்திலேயே மீண்டும் தேர்வெழுத வகை செய்யும் புதிய திட்டமும் அமலாக்கப்பட்டுள்ளது.இதனால் தோல்வியடையும் மாணவர்கள் ஓராண்டு வீணாகிவிட்டதே என்ற கவலையேபட வேண்டிய அவசியம் இல்லை. இந்தத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பெற்றோர் மற்றும் மாணவர்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் கல்வி அமைச்சர் தம்பிதுரை.
தேர்வு முடிவுகள் முதலில் 25ம் தேதி தான் வெளிவர இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 8 நாட்கள் முன்னதாகவே முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. பொது நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமாணவர்களை காத்திருக்க வைக்க அரசு விரும்பாததால் முன் கூட்டியே முடிவுகளை அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications