காங்.- த.மா.கா. இணைப்பு: பதவிகளைப் பிடிக்க போட்டாபோட்டி
சென்னை:
காங்கிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்புத் தேதி ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கடந்த வாரம் இரு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களானஆஸ்கர் பெர்னாண்டசும் ரமேஷ் சென்னிதலாவும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்துப்பேசினார். இணைப்புத் தேதி சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், இப்போது ஒரு வாரம் ஆகலாம் என்று இளங்கோவன் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
காஷ்மீர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து சோனியா காந்தி அரசுடனும் எதிர்க் கட்சியினருடனும்தீவிர ஆலோசனைகளில் இருப்பதால் அவரால் தமிழக விவகாரங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.
அடுத்த வாரத்தில் அவர் நிச்சயம் இது குறித்து விவாதித்து இணைப்புத் தேதியை அறிவிப்பார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ். மூலம் கட்டாய ஓய்வு கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதை. இத்திட்டத்தை உடனே அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும்என்றார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் தனக்கும் தனது கட்சியினருக்கும் முக்கிய பதவிகளை வழங்க வேண்டும் என்றுகேட்டு வருகிறார் வாசன். இதனால் தான் இணைப்பு விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இளங்கோவனே நீடிக்கலாம், அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ்விவகாரங்களை கவனிக்கும் அகில இந்திய பார்வையாளர் பொறுப்பை தனக்கு வழங்க வேண்டும் என்கிறார்வாசன்.
மேலும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விநாயகமூர்த்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ்கமிட்டியில் இடமும் கேட்கிறார்.
அதே போல காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக கோடிக்கணக்கான சொத்து உள்ளது. இந்தஅறக்கட்டளையின் முக்கிய பொறுப்பில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் நியமிக்க வேண்டும் என்கிறார்.
இதில் சில கோரிக்கைகளை ஏற்க காங்கிரஸ் தயார் என்றாலும் அறக்கட்டளை, சொத்து போன்ற விவகாரங்களில்விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதனால் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதனால் தான் இணைப்புதாமதமாகிக் கொணடிருக்கிறது.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியில் கேட்டு வாங்கப்படும் முக்கியப் பதவிகளைப் பிடிக்க தா.மா.காவுக்குள்ளேயேகடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் குழம்பிப் போய் இருக்கிறார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications