மாமன் மகள் கிடைக்காததால் தற்கொலை மிரட்டல்: வாலிபர் கைது
சென்னை:
மகளைக் கட்டி வைக்க மாமா மறுத்து விட்டதால் கோபமடைந்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்யப் போவதாகமிரட்டனார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் முருகேஷ் என்ற முருகேசன். இவரது பெற்றோர் கொல்கத்தாவில் வசித்து வருகின்றனர். ஆனால் முருகேஷ்கடந்த பல வருடங்களாக சென்னை அருகே உள்ள செம்பியத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருக்கிறார்.
மாமாவின் மகள் மீது அவருக்கு காதல் பிறந்தது. ஆனால் அந்தப் பெண் முருகேசனை விரும்பவில்லை என்று தெரிகிறது. மாமாவிடம்,அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு முருகேசன் கேட்டுள்ளார்.
ஆனால், எனது மகள் உன்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று முருகேசனின் மாமா கூறிவிட்டார். மேலும்முருகேசனை கொல்கத்தாவிற்குச் சென்று விடுமாறும் கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து முருகேசன் கோபித்துக் கொண்டு கொல்கத்தா சென்றுவிட்டார்.
இந் நிலையில் தனது மகளை வேறு மாப்பிள்ளைக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டார் மாமா.
இதை அறிந்த முருகேசன் கோபத்துடன் சென்னை திரும்பினார். நான் எத்தனையோ முறை கேட்டும் மகளைக் கொடுக்க மறுத்து விட்டுஇப்போது வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டீர்களே, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என் சாவுக்குநீங்கள்தான் பொறுப்பு என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அவரை சமாதானப்படுத்தி உட்கார வைத்த மாமா, உடனடியாக செம்பியம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்துவந்து முருகேசனை கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications