அவசரமாய் கூடியது பாதுகாப்புக் கமிட்டி கூட்டம்
டெல்லி:
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இந்தியா தயாராகி வரும் நிலையில் சமாதான முயற்சிகளில் அமெரிக்காஈடுபட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் நேற்றிரவு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுத்துவிட வேண்டாம் என்றும் பாகிஸ்தானை அமெரிக்கா நிச்சயம்கட்டுப்படுத்தி வைக்கும் எனவும் பாவல் கூறியுள்ளார்.
முன்னதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் நேற்று மாலை ஜஸ்வந்த் சிங்கை நேரில்சந்தித்து நிலைமை குறித்து விவாதித்தார்.
வாஜ்பாய் வீட்டில் முக்கிய கூட்டம்:
இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான பதிலடி தருவது என்பது குறித்து ஆராய பாதுகாப்பு குறித்த கேபினட்கமிட்டியின் கூட்டம் இன்று பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் காலை கூடியது.
வாஜ்பாய் ராணுவக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து திரும்பியவுடன் இந்தக் கூட்டம் தொடங்கியது.
இதில் ராணுவத் தளபதி பத்மநாபன், கடற்படைத் தளபதி அட்மிரல் மாதவேந்திர சிங், விமானப் படைத் தளபதிகிருஷ்ணமூர்த்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி, இன்டலிஜென்ஸ் பீரோ இயக்குனர்,ரா உளவுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, ராணுவ உளவுப்பிரிவின் டைரக்டர் ஜெனரல், காஷ்மீருக்கான மத்திய அரசின் சிறப்பு ஆலோசகர் கே.சி.பந்த், கேபினட் செயலாளர்டி.ஆர். பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் எந்தவிதமான பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றுதெரிகிறது.
ஓரணியில் இந்தியா:
முன்னதாக தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்பது எனநாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று காலை முதல் பாகிஸ்தான் உதவியுடன் இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதம் குறித்து லோக்சபாவில்விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினர். தீவிரவாதத்துக்குஎதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் முழு ஆதரவு தெரிவிப்பதாக அனைத்துக் கட்சியினரும்அறிவித்தனர்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி விரைவில்தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறினார்.
ராணுவரீதியிலான நடவடிக்கையா, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமா,அல்லது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கூற அத்வானி மறுத்துவிட்டார்.
என்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்க் கட்சிகளுடன் பேசிய பின்னரே அரசு செயலில் இறங்கும் என்றார்.
இதையடுத்து மத்திய அரசுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications