திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை: லஞ்சத்தை ஜன்னல் வழியே வீசிய அலுவலர்கள்
திருச்சி:
திருச்சி (ஆர்.டி.ஓ.) போக்குவரத்து அலுவலகத்தில் பெரும் அளவில் தில்லுமுல்லுகளும் ஊழல்களும் நடந்துவருவதையடுத்து அங்கு தீவிர விசாரணை நடத்தப்பட்டு முக்கிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடக்கும் ஊழலுக்கு அளவே இல்லாமல்போய்விட்டது. புது வாகனம் வாங்குபவர்கள் அந்த வாகனத்தை ரிஜிஸ்டர் செய்து வெளியே கொண்டுவருவதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது.
பார்ம் கொடுக்க லஞ்சம், அதில் சீல் வைக்க லஞ்சம், அதை அதிகாரியிடம் கொண்டு செல்ல பியூனுக்கு லஞ்சம்,அதிகாரியின் கையெழுத்து வாங்க லஞ்சம், எல்லாம் முடிந்த பின் அதைப் பார்த்து வாகனத்தை ரிலீஸ் செய்யும்ஊழியருக்கு லஞ்சம் என உயிரை வாங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்றும் ஆயிரக்கணக்காணவர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் தான் வண்டிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் ஆர்.டி.ஓ. ஆபிஸ் லஞ்சம் தான்.
லர்னிங் லைசென்ஸ் எனப்படும் டிரைவிங் பயிற்சிக்கு 6 மாதத்துக்கு லைசென்ஸ் எடுக்கச் சென்றால் முன்னால்கூறியது மாதிரி விண்ணப்பம் வாங்குவதில் ஆரம்பித்து பின்னர் அதிகாரியிடம் கையெழுத்து வரை கிட்டத்தட்ட500 ரூபாயைப் பிடுங்கிவிடுகிறார்கள்.
6 மாதம் கழித்து டிரைவிங் லைசென்ஸ் எடுக்கப் போனால் நீ சரியா எட்டு போடலை, திரும்பும்போது கையைசரியா ஆட்டலை என்று இல்லாத குறைகளை எல்லாம் கண்டுபிடித்து நம்மைக் கேவலப்படுத்துவார்கள். பின்னர்சோமாய் நாம் ஒதுங்கி நிற்கும்போது, என்ன தம்பி டெஸ்ட் பாஸ் ஆகலையா? கவலைப்படாதே 1,000 ரூபா கொடுலைசென்ஸ் வாங்கித் தருகிறேன் என்று புரோக்கர் வந்து நிற்பான்.
இந்த புரோக்கர்களுக்கும் ஆர்.டி.ஓ. அலுவல ஊழியர்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம் உண்டு. இதில் யார்புரோக்கர், யார் ஊழியர் என்றே கூட பிரித்து அடையாளம் காண முடியாது. அவ்வளவு தூரம் புரோக்கர்களுக்குஆர்.டி.ஓ. அலுவலகத்தில் செல்வாக்கு உண்டு.
பிரேக் இன்ஸ்பெக்டர்கள் என்று ஒரு பதவி உண்டு. இந்தப் பதவிக்கு வரவே பல லட்சங்களைத் தந்தாக வேண்டும்.காரணம் அதில் உள்ள வருமானம். இந்த பிரேக் இன்ஸ்பெக்டர் ஓ.கே. செய்தால் தான் வாகனங்களின் பெர்மிட்நீட்டிக்கப்படும்.
இவர் வண்டியை ஓட்டிப் பார்த்து நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அதற்கு பெர்மிட்டை நீட்டிக்க வேண்டும்.ஆனால், வண்டி எவ்வளவுக்கு எவ்வளவு மோசமோ அவ்வளவு பணத்தை வாங்கிக் கொண்டு பெர்மிட்டைநீட்டிப்பார்.
அந்த வாகனங்கள் தான் இன்று தினந்தோறும் நடந்து வரும் ஆயிரக்கணக்கான விபத்துகளுக்குக் காரணமாகவிளங்குகின்றன. பிரேக் இன்ஸ்பெக்டரின் தினசரி லஞ்ச வருமானம் சராசரியாக ரூ. 15,000க்குக் குறையாதுஎன்கிறார்கள். இவர்களின் மாத ஊதியமே ரூ. 10,000 தான்.
இதில் ஆர்.டி.ஓ. அலுவலக பெண் ஊழியர்களும் சளைத்தவர்கள் அல்ல. ஆண் ஊழியர்களுக்கு இணையாகவெளிப்படையாகவே இவர்கள் லஞ்சம் கேட்கும்போது நமக்கே கைகால் நடுங்கிவிடும்.
இப்போது தான் இந்த ஆர்.டி.ஓ. அலுவலக ஊழல் குறித்து தமிழக அரசு விழித்துக் கொண்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை முடுக்கிவிட்டு அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களும் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. இதில் திருச்சி வட்டார அலுவலக அதிகாரி தான் முதலில் சிக்கியுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும்பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தபோதுஅங்கிருந்த ஊழியர்கள் காலை முதல் தாங்கள் வசூல் செய்த ஆயிரக்கணக்கான பணத்தை ஜன்னல் வழியாக தூக்கிவெளியில் எறிந்துள்ளனர்.
சிலர் அதைக் கிழித்து துண்டுதுண்டாக்கி குப்பைத் தொட்டியிலும் டாய்லெட்டிலும் எறிந்துள்ளனர்.
இருந்தும் கூட அந்த அலுவலக ஊழியர்களிடம் இருந்து ரூ. 50,000 வரை பணம் லஞ்சப் பணம் சிக்கியது.வெளியில் வீசப்பட்ட, கிழித்தெறியப்பட்ட பணமும் ரூ. 20,000 வரை இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.ஆக, ஒரு நாளைக்கு மதியம் வரை திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மட்டும் வசூல் செய்யப்படும் லஞசம்சராசரியாக ரூ. 70,000 லட்சம். ஒரு நாளைக்கு சராசரியாக 1.4 லட்சம் லஞ்சமாக வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் சேர்த்தால் ஒரு மாத லஞ்சம் பல நூறு கோடிகளைத்தாண்டுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் காரில் திருச்சிக்கு சென்றுள்ளார்.அவரது வாகனம் திருச்சியில் விபத்துக்குள்ளாகியது. இதையடுத்து அந்த வாகனத்துக்கு இன்சூரன்ஸ் பணத்தைவாங்குவதற்காக ஆக்சிடன்ட் சர்டிபிகேட் கேட்டு திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஏற்கனவே விபத்தில் வாகனத்தை இழந்துவிட்டுத் தவித்த அவரிடம் சான்றிதழ் தர வேண்டுமானால் ரூ 3,000லஞ்சம் தர வேண்டும் என்று ஆர்.டி.ஓ. அலுவலக பிரேக் இன்ஸ்பெக்டர் ஜெயமனோகரன் மற்றும் புரோக்கர் துரைஆகியோர் கேட்டுள்ளனர்.
இதனால் வெறுத்துப் போன அந்த நபர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார். உடனே இதை தங்கள்தலைமை அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து உடனடியாகமாநிலத்தின் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களையும் கண்காணித்து ஊழல் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கஅவர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து தான் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து பிரேக் இன்ஸ்பெக்டர்ஜெயமோகனையும் ஆர்.டி.ஓ. அலுவலக மாமா துரையையும் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications