குஜராத்தில் இருந்த ராணுவம் எல்லைக்கு விரைகிறது
டெல்லி:
எல்லையில் போர் அபாயம் சூழ்ந்துள்ளதால் வன்முறையையொட்டி குஜராத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவப்படைகள் அங்கிருந்து விலக்கப்பட்டுள்ளன.
இந்தப் படைகள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் அம்மாநில பா.ஜ.க.முதல்வர் நரேந்திர மோடி மற்றும் போலீசாரின் உதவியுடன் வன்முறையாளர்கள் ரத்தக் களரியை ஏற்படுத்திவந்தனர்.
இந்தியா மற்றும் உலக அளவிலான எதிர்ப்பால் பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. கேபிஎஸ் கில்அனுப்பப்பட்டார். ராணுவமும் குவிக்கப்பட்டது.
கில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஒரே வாரத்தில் வன்முறை ஓய்ந்தது. வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.க.,சிவசேனை, பஜ்ரங் தள் ஆட்களையும் பிடித்து உள்ளே தள்ளினார் கில். வன்முறையாளர்களுக்கு உதவியாக இருந்தபோலீஸ் உயர் அதிகாரிகளும் அதிகாரமில்லாத பதவிகளுக்கு தூக்கி வீசப்பட்டனர்.
இதனால் இன்றொடு 8வது நாளாக குஜராத்தில் வன்முறை அமைதி நிலவி வருகிறது. கடந்த வாரம் வரைசராசரியாக ஒரு நாளைக்கு 10 பேர் உயிரிழந்து வந்தனர். மொத்தம் 1200 உயிர்கள் இரு மாதங்களில் பலியாயின.
இந் நிலையில் பாகிஸ்தானின் வாலாட்டல் காரணமாக அந் நாட்டுக்கு பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது.ராணுவப் படைகள் காஷ்மீர் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளிலும்குவிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் குஜராத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.
நேற்று கடலோர காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படையை கடற்படை மற்றும் ராணுவத்தின் கீழ் கொண்டு வந்தஇந்திய அரசு இப்போது மத்திய அரசுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல்களையும் கடற்படையின் கட்டுப்பாட்டில்கொண்டு வந்துள்ளது.
தேவைப்பட்டால் இந்தக் கப்பல்கள் கடற்படையின் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications