விற்கப்படும் தொட்டில் குழந்தைகள் !
தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ்ஒப்படைக்கப்படும் குழந்தைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பெண் சிசுக் கொலை அதிகமாக நடைபெறும் தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்காகஅரசு தொட்டில் குழந்தை திட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்த விழா கடந்தமார்ச் 23ம் தேதி மாநில அமைச்சர்கள் பங்கேற்க வெகு சிறப்பாக நடைபெற்றது.
திட்டம் தொடங்கிய நாளன்றே இரண்டு குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். பின்னர், சேர்க்கப்பட்டகுழந்தைகள் முறையான ஆவணங்களுடன் தான் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்மீண்டும் வந்து பெற்றுக் கொண்டு செல்வதாகத் தகவல் வந்தது.
போதிய ஆவணங்கள் இல்லாததால் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட ஒரு ஆண்குழந்தை மீண்டும் பெற்றோரிடமே அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் கடத்திக்குட்டையைச் சேர்ந்தஅந்தப் பெற்றோரான கண்ணன்-மாதம்மாள் தம்பதியரோ தாங்கள் அந்தக் குழந்தையைத் திரும்பப் பெறவேஇல்லை என்று கூறினர்.
ஆனால் வரவேற்பு மைய ஒப்பு சீட்டில் குழந்தையை பெற்றுக் கொண்டதாக கண்ணன் கைநாட்டு இட்டுள்ளார்.இதனால் குழம்பிப் போன மருத்துவக்குழு இந்த பிரச்சினையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
கலெக்டரின் உத்தரவுப்படி தர்மபுரி தாசில்தார் ஜேசுதாஸ் மனோகரன் நடத்திய விசாரணையின் போதும்குழந்தையைத் திரும்பவும் பெற்றுக் கொண்டதாகக் கூறுவதை கண்ணன் மறுத்தார்.
இதையடுத்து தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் குழந்தைகள் விற்கப்படுகின்றனவோ என்றசந்தேகம் எழுந்துள்ளது.
தகுந்த ஆவணங்கள் இல்லாமல் பெற்றோர்கள் ஒப்படைக்கும் குழந்தைகளை வாங்கிக் கொள்ளும் வரவேற்புமையப் பணியாளர்கள் சிலர், அந்தக் குழந்தைகளை விற்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications