தவறுதலாக துப்பாக்கி வெடித்து வங்கி காவலாளி சாவு
சென்னை:
சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்அவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கதீட்ரல் கிளையில் நேற்று (திங்கள்கிழமை)இந்தச் சம்பவம் நடந்தது.
வங்கிக் காவலாளிகள் பொதுவாக இரட்டைக் குழல் துப்பாக்கிகளைத் தான் பாதுகாப்புக்காக வைத்திருப்பார்கள்.இந்த வங்கியின் காவலாளியான ராமனும் இது போன்ற துப்பாக்கியை வைத்திருந்தார்.
நேற்று மதியம் சுமார் 2.15 மணியளவில் திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்துபதறியடித்துக் கொண்டு வங்கி ஊழியர்கள் அனைவரும் வங்கியின் வாசலுக்கு ஓடிச் சென்று பார்த்தனர்.
அப்போது ராமன் தலை சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் அருகில் யாரும்இல்லாததால், தவறுதலாக அவருடைய விரல் பட்டுத் தான் துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும் என்று வங்கிஊழியர்கள் கூறினர்.
தகவலறிந்து விரைந்து வந்த ஆயிரம் விளக்குப் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கியில் பணிபுரிந்து வந்த ராமனின் மகன் அசோக்கும் இதே வங்கி வளாகத்தில்உள்ள கேன்டீனில் தான் பணிபுரிந்து வருகிறார். ராமனுக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications